புதன், 5 பிப்ரவரி, 2020

மியாவ்,,மியாவ்,,,

வீட்டிற்குச் செல்ல வேண்டும் முதல் வேளையாய் என நினைத்தவன் அமர்ந்திருந்த இடம் மாடசாமியண்ணனின் டீக்கடையாய் இருக்கிறது.

பஸ்ஸை விட்டு இறங்குகிற சடுயற்ற சமயங்களில் அங்கு போய் டீக்குடிப் பது தான் ஏற்றதாய் இருக்கிறது.
 
சமயத்தில் டவுன் பஸ் ,சமயத்தில் தனியார் பஸ்,,,ஆறு மணிக்கு ஏறுகிற தனியார் பஸ் ஏழு மணியை அனுசரித்து வருவதுண்டு,டிரைவர் கொஞ்சம் வேகம் காட்டினால் ஆறே முக்கால் ஆறு ஐம்பதிற்கு தாய் மண்ணில் கால் வைப்பது உறுதிபட்டுப்போகும்.

அரை தூக்கத்திலும் அயர்ச்சியிலுமாய் பஸ்ஸை விட்டு இறங்கி தரையில் கால் வைக்கிற நேரம் இந்த அயர்ச்சி போக்க ஏற்றது டீதான் எனத்தோணும்,

கடைக்குப்போனதும் அந்த முடிவில் கொஞ்சம் மாற்றமும் முடிவிற்கு முளைத்த இறக்கையுமாய் சேர்ந்து ஏதாவது சாப்பிட்டு விட்டு டீயைக் குடித் தால் என்ன என்கிற முடிவை எடுக்க வைக்கும்,எடுத்த முடிவை நாவும் ஆசையுமாய் சேர்ந்து நிறைவேற்றி வைக்கும்,

பெருமாலுமாய் வடை சாப்பிட மாட்டான், அந்த நேரத்தில் வடையும் வைத்திருக்க மாட்டார் அவர்,

தற்செயலாகத்தான் சொன்னார் ஒரு நாளில் ,”சார் பிஸ்கட் இருக்கா,பிஸ்கட் இருக்கான்னு கேப்பீங்களே,இந்தா இருக்கு சார் பிஸ்கட்,,,,நல்லாயிருக்கும் எடுத்துச்சாப்புடுங்க,”என்றார் கடைக்காரர்,

அன்று பிடித்துப்போன ருசி ஒரு வருடத்திற்கும் மேலாக இன்னமும் நாவில் ஒட்டிக்கிடக்கிறதுதான்,

வீட்டின் காம்பவுண்ட் சுவரை எட்டித்தொட்ட போது தெருவில் மழை நீர் புரள ஆரம்பித்திருந்தது.

நீண்ட நாட்களாகிப் போனது மழை பார்த்து, மழைக்கும் மனிதனுக்குமாய் விழுந்து விட்ட இடைவெளி இன்னும் நீண்டு கொண்டுதான் போகிறது தவிர்த்து குறையக் காணோம்.

மரத்தை மறுதலித்து கட்டிடங்களை ஏற்றுக்கொள்ள எப்பொழுது பழகிப் போனோமோ அப்பொழுதிலிருந்தே நமக்கும் மழைக்குமான இடைவெளி அதிகரித்துத்தான் போனது,என்கிறான் நண்பன்.

வாஸ்தவம்தான்நீசொல்வது எனவைத்துக்கொண்டாலும் கூட தேவைகளை யும் அத்தியாவசியங்களையும் என்ன செய்வது,,,?

அத்தியாவசியங்களையும் தேவைகளையும் புறந்தள்ளி விட முடியாதுதான், ஆனால் அனாவசியங்களையும் ,ஆடம்பரங்களையும் தவிர்க்கலாம்தானே,
என்பான் பதிலுக்கு/

ரயில்வே பாலத்தில் ஏறுகிற போதே வானம் கொஞ்சம் மப்பு மந்தாரம் காட்டியும்தான் இருந்தது,

மேற்குப்பக்கமிருந்து ஏறினான், இன்று பஸ் போக்குவரத்து இல்லாததால் கொஞ்சம் இடைஞ்சலின்றித் தெரிந்தது,பாலம்,

பஸ்கள்வரவில்லைஎன்றாலும்கூடஅவற்றின்குறையைப்போக்க இரு சக்கர வாகனங்கள் இருக்கிறதுதானே,/ குறுக்கும் நெடுக்குமாய் அவசரம் காட்டி விரைகிற வாகனங்கள் எப்பொழுதும் அத்தியாவசியங்களை கேலி செய்வ தாய் அமைந்து போகிறதுதான்,

இது போலாய் இடைஞ்சலற்ற ஒரு நாளில் பாலத்தின் மீதாய் நடந்து போய்க் கொண்டிருந்தான், பாலத்தின் மீது நடக்கிற கணங்களிலெல்லாம் பகத் மாமாவின் ஞாபகம் வருவது தவிர்க்க இயலாததாகவே/

“வாடா சும்மா டீக்குடித்துக்கொண்டே பேசுவோம் என வழக்கம் போல முன்னறவிக்கிற இவர்களில் எப்பொழுதும் ரகீம், பரமு என்கிற பரமசிவம், லூர்து மிக்கேல்,,” என்கிற அனைவரின் கைகோர்ப்பும்,மனம் கோர்ப்புமாய் இருக்கும்,

லூர்து மிக்கேல்தான் வழக்கம் போல பேச்சிற்கு வித்திடுவான்,ரகீம் சிறிது தண்ணீர் ஊற்றி உறம் இடுவான், பரமசிவம் பேசும் பேச்சிற்கு வைக்கப் போகிற முற்றுப்புள்ளி போல் ரெடியாய் நூல் பிடித்துக்காத்திருப்பான்,

குறிப்பிட்ட நேரம் ,குறிப்பிட்ட இடம்,குறிப்பிட்ட நபர்கள்,குறிப்பிட்ட பேச்சு என்கிற பிடிவாதத்தில் வேரூன்றி நிற்பவன்.

இவனுக்கென்றால் அப்படியெல்லாம் வேண்டாமே என்பதாயொரு துளிர் ப்பு,,,கட்டுக்குள் என்பது சரிதான், அதற்காக கட்டுக்குள் மட்டுமே என்பதுதான் சாஸ்வதம் எனும் போதுகொஞ்சம்தெறிக்கவும் உடைக்கவும்வேண்டியதாய்த் தான்த்தான் இருக்கிறது.

சாலையில் இடது பக்கம் போ,வலது பக்கமாய் வா,பிளாட்பாரம் முக்கியம் என்பதெல்லாம் சரிதான் அதற்காக சாலையின் ஓரமாய் பள்ளம் பறித்து அதனுள்ளே குடிகொண்டு விட வேண்டும் என்பது நடைமுறையில் எந்த அளவிற்கு சரியானதாய் இருக்கும் என்பது தெரியவில்லை,

”சரியப்பாநீ சொல்ற படியெல்லாம் இருக்குறேன்னே வச்சிக்கிறுவமே, அதனால என்ன பிரயோஜனம்,அப்பிடியெல்லாம் இருந்து என்னதான் ஆகப் போகுது,ரொம்ப நூல் பிடிச்சிக்கிட்டு ரொம்பவும் கடுங்காப்பியா இருந்துகிட்டு பக்கத்துல இருக்குறவன பிராண்டி எடுத்து அவன் மூஞ்சி முதுகெல்லாம் ரத்தம் வர வைச்சி எதுக்கு இப்பிடியெல்லாம் செய்யணும், காரியம் சாத்தியம் எது வோ அதத்தான் செய்யணுமே ஒழிய ஊரே ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கும் போது நம்ம அதுக்கு எதித்தபக்கம் ஓடுனா எப்பிடி,,,?அது போலத் தான் இருக்கு நீ சொல்றது,இப்ப என்ன டீக்கடைக்கு நீ வர்றதுக்கு முன்னாடி நான் வரப் போறேன்,நான் வர்றதுக்கு முன்னாடி அந்தா அவன் வரப் போறான்,இல்லாட்டி கொஞ்சம் முன்னப்பின்ன வருவோம்,இருக்குற கொஞ் சம் பேரயும் அடன்சன், ஸ்டேண்டடீஸ்ன்னா,,,,ஓடிப்போவோம் ஆமா எனும் சப்தமெடுத்துச்சிரிப்பான் பரமசிவம்,

பேசட்டும், கலந்துரையாடட்டும், விவாதிக்கட்டும்,,,,, இன்னும் இன்னுமா அவுங்க எடுத்து பேசுற பேச்சு மேல அவர்களுக்கு ஒரு நம்பிக்கை துளிர்க்க ட்டும்,அதவிட்டு துளிர்க்கிற தளிரச்சுத்தி மின்சார வேலி போட்டா எப்பிடி,,,

என பகத்திடம் விவாதிப்பவன் இப்பொழுது அவனை செல்லில் அழைக்க லாமா என யோசிக்கிறான்,

பாலம் ஏறி இறங்கும் முன் கால்வலிஅசாத்தியம் கொள்கிறதாய்,,,/ வேறு வழியற்று மிகவும் தயங்கி பகத்தை கூப்பிட்ட போது சிறிது நேரத்தில் வந்து நின்றான்.

அவன் வரவில்லையானால் பாலம் ஏறி இறங்கியவுடன் ஏதாவது மருத்து வரிடம் போக வேண்டியதாய் இருந்திருக்கும்,
 
 மாறாக அவன் கொண்டு வந்து இறக்கிவிட்டது கால் வலிக்கு மருந்திட்டது போல் இருந்தது.

பாலத்தின்இருபுறமுமான உட்சுவர்களில் வெள்ளையும் கறுப்புமான இழுக்கப் பட்டிருந்த கோடுகள் அதன் பொழிவை இழந்து தூசி அடைந்து தெரிந்ததாய்/

உயர்ந்து நின்ற மின் கம்பங்களின் வரிசை அந்த இரவில் சிறிது ரம்மியப் பட்டே,,

காம்பவுண்ட் சுவரை பிடித்தவனாய் வீட்டிற்குள் செல்ல காலடி எடுத்து வைக்கும் போது செத்தையும் தூசியுமாய் ஓடிய சாக்கடையில் யாரோ விட்ட காகிதக்கப்பல் மிதந்து போய்கொண்டிருந்தது,

தூரத்து மரங்களிலிருந்து பறந்து போய்க்கொண்டிருந்த பறவைகள் இரண்டு அருகாமை காட்டி இருந்த மரங்களில் தஞ்சமடையச்சென்றது,கூடு கட்டுவ தும் குஞ்சு பொறிப்பதுமாய் இருக்கிற காதல் ஜோடி போல் பட்டது,

வலதுகையால்முகத்திலிருந்ததண்ணீரை அழுந்தத்துடைத்தவன் தலையைக் குனிந்தவனாய் வீட்டிற்குள் செல்ல காலடி எடுத்து வைத்த போது உயிர் வற்றிப்போன பூனையின் குரல்.

திரும்பிப்பார்த்தவன் வாசலுக்கு அடியில் இருந்து வந்த குரலுக்கு செவி சாய்த்தவனாய் குடையுடன் குனிந்து பார்க்கிறான்,

விசிறிப் பெய்த மழை கொஞ்சம் தரையை நனைத்திருந்தது,படிகட்டின் உள் இடத்திலும் சேர்த்து.

நனைந்த இடம் போக ஈரமில்லாத இடமாய்ப் பார்த்து தன் புசுப்புசுத்த முடியுடன் ஓரமாய் ஒதுங்கிப்படுத்திருந்த பூனை இவனைப்பாத்ததும் மீசை முடியை சிலிர்த்துக் கொண்டு கண்கள் பளபளக்க கொஞ்சம் பின் வாங்கி யது.

கலப்பின ரகமோஎன்னவோதெரியவில்லை,புசுபுசுவெனநன்றாகஇருந்தது,

உடலைக்குத்திய ஈரத்தரையில் முன்னாலும் செல்ல முடியாமல் பின்னாலும் செல்ல முடியாமல் படுத்திருந்த இடத்திலேயே பம்மிக்கொண்டு சப்தமெ ழுப்பிக் கொண்டிருந்தது, மியாவ்,,மியாவ்,,மியாவ்,,,,/

அப்பொழுதுதான் கவனித்தான் பூனையின் வயிறு கொஞ்சம் உப்பலாய் இருந்ததை/

எதுவும் சாப்பிடதனால் ஏற்பட்ட வயிறு நிறைவு போல் இல்லை.அதன் இருப்பையும் சங்கடத்தையும் பார்க்கிறபோது கர்ப்பமாய் இருப்பது போலத் தோணியது,

வீட்டிற்குள் குரலை அனுப்பி மனைவியை அழைத்தவன் சாக்குக்கொண்டு வரச் சொல்லி விரித்து காலால்தள்ளி விட்டான்.

முறைப்பிலிருந்து சற்றே விலகி கண்களை பணித்திருந்த பூனை இவன் மடக்கி விரித்து முன் தள்ளிய சாக்கில் ஏறிப்படுத்துக்கொள்கிறது தன்னை வாகுப்படுத்திக்கொண்டு.

வீட்டினுள் சென்றவனுக்கு டீக்கொடுக்கும் முன்பாகவே குறுக்கிட்ட மனைவி அது இருக்குற நெலைமையப்பாத்தா இன்னைக்கே குட்டி போட்டிரும் போல இருக்கு.ஏங்கஅதுபாட்டுக்குஇங்கேயேஇருக்கட்டுங்க,புள்ளைங்கஆசைப்படுது, எனக்கும் கூட அது இங்கயே இருக்கணுமின்னு ஆசையா இருக்குதுங்க, எனச் சொன்ன அவளை ஏறிட்டவன் ”அந்த ஆசைப்படுற லிஸ்ட்டுல என்னையும் சேத்துக்க”என்றான் கொஞ்சம் சிரித்தவனாய்.
 
 “சும்மா இருங்க சின்னவ ரூமுக்குள்ல இருக்கா,கொள்ளிக் கண்ணுக்காரி,, ,,என்றவள் டீக்கொண்டு வர சமையலறைக்குள் செல்கிறாள்.

ஏக்கங்களே பலவற்றிற்கு பலசமயங்களில் விடையாகிப்போகிறதாய், சமை யலறையைப்பார்க்கிறான். ஏதோ ஒரு அதிசயம் பார்ப்பது போல/

டீப்போட்டுக்கொண்டிருக்கிறாள்மனைவி.ஊதாகலர்நூல்சேலைக்கு சிவப்புக் கலரில் அணிந்திருந்த ஜாக்கெட் ஒத்துப்போனது,

புது வித மேட்சிங்.டீ ஊற்ற எடுத்த டம்ளரும் அதுவரை ஸ்டவ்வில் டீத் தண்ணீர் காய்ந்து கொண்டிருந்த சட்டியும் மறு நிடம் கழுவப்பட்டு அதனதன் இடத்தில் /

தூரத்திலிருந்து பார்க்க ஏதோ மேஜிக் போலத்தெரிகிறது,அருகில் போய் பார்த்தபோதும் அப்படியே.வைத்தது வைத்த இடம் எடுத்தது எடுத்த இடம் என்பதுசிலருக்குவாய்க்கப்பெற்ற வரமே,,/அப்படியில்லையென்றால் செய்கிற வேலையில் நிரவிருக்காது அவர்களுக்கு/

ஆற்றிக்கொடுத்த டீயை ஊற்றிகொடுத்த அன்பு அவளிடம் மிகைப்பட்டுத் தெரிகிறதாய் அந்த நிமிடத்தில்/

டீயின் மிடறுகள் ஒவ்வொரு துளியாய் நாவின் சுவையறும்புகள் பட்டு உள்ளிறங்கிக்கொண்டிருந்த நேரமாய் இளைய மகள் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்கிறாள்.

“உஸ்ஸீ,,,கிறுக்கி எத்தன தடவை சொல்லீருக்கேன், இப்பிடி டீ டம்ளரோட நிக்கும் போது காலக்கட்டிக்காதன்னு, டம்ளர்ல இருக்குறது அலம்பி மேல விழுந்துச்சின்னா அதுவும் மொகத்துல கிகத்துல விழுந்துச்சின்னா சுடு பொருள் இல்லையாஒடம்பு பொத்துப்போகாதா,கண்ணுல ,கிண்ணுல விழுந் தா என்னா குறது சொல்லு, அதுக்காகச்சொன்னா எத்தன தடவச் சொன்னா லும் கேக்க மாட்டேங்குறமிடிவாதமா,திரும்பத்திரும்ப இப்பிடியே பண்ணுற, என்னைக்கி வெளையாட்டு வெனையாகப் போகுதோ,,,,,,என்றவனை ஏறிட்ட வள் அப்பிடி யெல்லாம் ஒண்ணும் ஆயிறாது என்றாள்,

”இப்பிடியே ஏதாவது ஒண்ணு நடந்து,ஏதாவது ஒண்ணு ஆகிப் போகு மு ண்ணு நெனைச்சா அப்பிடி ஆகிப்போகுந்தான் கண்டிப்பா,நம்ம ஏன் அப்பிடி நெனைக்கணும் ,ஒண்ணும் ஆகாதுண்ணே நெனைப்போம்.தவிர அப்பாவ ஓடிவந்து கட்டிக்கிறவும்,ஒட்டிக்கிறவுமுன்னுநெனைக்கிற நேரம் தான கட்டிக் கிறவும் ஒட்டிக்கிறவும் முடியும்,தாகம் எடுக்குற நேரந்தான தண்ணி குடிக்கத் தோணும், தாகம் அடங்கிப்போச்சின்னா அப்புறம் தங்கச் செம்புல தண்ணி குடுத்தாலும் தேவைப்படாதுதானே?” எனப் பேசிக் கொண்டு சென்றவளை நோக்கி வேகமாக வந்த இவன் மனைவி ”அப்பிடியே ஓங்கி அடிச்சேன்னா,, ,ராஸ்கல் என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க, பெத்த தகப்பன்ட்ட பேசுற மாதிரியா பேசுற,கட்டிக்கிறுவேன், ஒட்டிக்கிறு வேன்னு மூதேவி, வெளங்காக் கழுத,,வரவர வாயி கால்வாமாதிரி ஆகிப்போச்சி,”என கோபமாய் இவனை ஏறிட்டாள்.,

“எல்லாம் ஒங்களச் சொல்லணும், அவளக்கெடுத்துக்குட்டிச் செவராக்குற தே நீங்கதான்,அவளுக்கு எட்டாயிரம் ரூவா செலவு பண்ணி செல்போன் வாங்கிக் குடுத்திருக்கீங்க,அவ ராப்பூரா தூங்காம அதை ஒண்ண கையில வச்சிக்கிட்டு லொட்டட்டி,லொட்டடீன்னு,,, தட்டிக்கிட்டு ஏதோ உலகத்த கரச்சிக்குடிச்சவ மாதிரியில்ல பேசுறா,பேச்சு,ஆளு பேருன்னு இல்ல, பேச்சுல ஒரு நிதானம் தெரியல என்றவளை மட்டுப்படுத்தி இப்ப என்னா அவ தப்பா சொல்லீட்டா ன்னு குதி குதின்னு குதிக்கிற .அப்பிடியே சொன்னாலும் ஏங் கிட்ட தான சொன்னா,ஊரார் கிட்டயா போயி பேசுனா, நம்ம புள்ளைங்க பேசுறத நாமளே ஏன் தப்பா நெனைக்கணும்,,? நம்ம காலத்துப்பேச்சுக வேற, இப்பப்பேச்சுக வேற,அப்பவயசுப்பொண்ணோபையனோ”லவ்வுன்னு”யாருக்கும் தெரியாமத் தான் போயி பேசுவாங்க, ஆனா இப்ப அப்பிடியில்ல, நம்ம நடுவீட்டுல டீ வி வந்து உக்காந்துக்கிட்டு அதுக்கு மேல என்னென்ன மோ பேசச்சொல்லிக் குடுத்துருது.

அப்புறம் ஏன் பேச மாட்டாங்க. தவிர தோணுற நல்லதுகள அப்பப்ப வெளிப் படுத்தீரணும்.அதமனசுக்குள்ள போட்டுபூட்டிவைச்சிக்கிட்டு இருந்த முன்னு வையி, அது வாட்டுக்கு பொதர் மண்டி பாம்பு பல்லி யெல்லாம் அடையிற யெடமா மாறிப்போகும். அப்புறம் வன்மம் புடிச்சி தீராக்கிறுக்கா அலைய வச்சி ரும்,எனபேசிக்கொண்டிருக்கும்போதேஇளையமகள்ரூமிலிருந்து வருகிறாள்.

“அம்மா அப்பிடித்தாப்பா,இன்னைக்கி நேத்தா பேசுறாங்க,வருசமெல்லாம் பேசுற பேச்சுதான,கேட்டுக்குறோம்”என்றவள்எனது மனைவியைப் பார்த்து ”அம்மா இனிமே வீட்ல அப்பிடியெல்லாம் பேசமாட்டேம்மா,நான் பேசுற பேச்சால நம்ம குடும்பத்து ஒழுக்கம் கெட்டுப்போகுதுன்னு இனி நான் அதச்செய்ய மாட்டேம்மா”என்றாள்,

“ஒன்னைய யாரும் இதச்செய்யி அதச் செய்ய வேணாமுன்னு சொல்லீறல இப்ப,இந்த வீட்டுல நீயும் ஓங் அக்காக்காரியும் ஏதும் செய்யாம யார் வந்து என்ன செய்யப்போறா,இது ஒங்களுக்கான யெடம் ,நீங்க கத்துக்கிறதுக்கான வெளி,இங்க கத்துக்காம வேற எங்க போயி கத்துக்கப்போற,என்ன கத்துக்குற காலத்துலயே கொஞ்சம் தெளிவா இருந்து கீழ மேல விழுந்து கையக்கால முறிச்சிக்கிறாம பெரிய அளவுலான சேதாரம் ஏதுமில்லாம தப்பிச்சிக்கிற லாம். அதத்தான் பெத்தவுங்க நாங்க சொல்றோம்.ஒங்களுக்கு கசப்பா இருக்கு,

“என்னதான் நவீன காலம் மார்டன் யுகமுன்னு ஆகிப்போன நேரத்துலயும் கூட ஒங்கள ஒருத்தன் கையில புடிச்சிக்குடுக்குற வரைக்கும் எங்களுக்கு தூக்கமில்ல,

“என்னடா அப்பா ஏதும் பேசாம அம்மா நான் மட்டும் பேசிக்கிட்டு இருக்கே ன்னு நெனைக்கிறையா,அந்த மனுசன் மனசு எனக்குள்ள தெரியும், புள்ளைங்க மனசு சூம்பிப்போயிரக்கூடாதுன்னு நெனைக்கிறாரு,பூனையப் பாக்கத்தான வந்த போயி பாரு அது இன்னைக்கி ராத்திரிக்குள்ள குட்டி போட்டுரும் என்ற அம்மாவை ஏறிட்டவள் சமையலறையில் இருந்த பாலை எடுத்துக்கொண்டு நகன்றாள்,

அன்றிரவே மூன்று குட்டிகளை ஈன்ற பூனை இப்பொழுது மியாவ், காட்டி கொண்டு வீட்டைச்சுற்றித் திரிவதாய்,,,/