திங்கள், 30 டிசம்பர், 2019

வெளிக்காத்து,,,,



திருமண மண்டபம் இருக்கிற இடம் பிடிபடவில்லை சரியாக,,,/ அருப்புக் கோட்டைக்கு செல்லும் சாலைக்கு அருகாமை காட்டி இருப்பதாய் அழைக்க வந்தவர் சொன்னதாய் ஞாபகம்,

போய் விட்டார்கள் இவனும் மனைவியுமாய் இரு சக்கர வாகனத்தில்/ சென்ற வாரம் பழுது பட்டு நின்ற இரு சக்கர வாகனத்தை சரி செய்து ஓட்டிக்கொண்டு வந்தான்,

ஒர்க்‌ஷாப்க்காரர் கூடசொல்லிவிட்டார்,”என்ன சார் இது,நானும் ஒங்க கிட்ட சொல்லிச்சொல்லிஅலுத்துப்போயிட்டேன்.வண்டியமாத்துங்கசார்,வண்டிய மாத்துங்கசார்ன்னு,,,நீங்களும் மாத்துற வழியக்காணம் ,இதுக்கு ரிப்பேருக்கு செலவழிக்கிற பணத்துக்கு நீங்க புது வண்டியில போட்டாலாவது பிரயோ ஜனம், இப்ப ஒரு தொகைய ஆத்தமாட்டாம ரிப்பேருக்குன்னு செலவழிக் கிறீங்க, அது செலவை இழுத்து வாங்கிக்கிட்டு திரும்பவும் ரெண்டு இல்ல மூணு மாசத்துல ஏதாவது மேஜரான செலவக்கொண்டு வந்து காமிக்கும் அப்பப்போட்டு மனசு சங்கடப்பட்டு இதுக்கு அழுவுறதுக்கு பேசாம புது வண்டிய வாங்கிட்டுப்போயிலாமுல்ல,,,,,,?

நீங்களும் அப்பப்ப நடு ரோட்டுல நின்னுக்கிட்டு எனக்கு போன் பண்ணி வண்டி நடு ரோட்டுல நிக்குது ரிப்பேராகி வாங்கன்னு கூப்புடுறீங்க,நானும் வர்றேன், ரிப்பேர் பண்ணித்தர்றேன்,இதுல பஞ்சர் தவிர்த்து ஒங்கள தர்ம சங்கடமான நெலையில தர்மசங்கடமான யெடத்துல நிக்க வச்சிருக்குது இந்த வண்டி. இல்லையா,”

ஒரு தடவை கே ஜி ஏ ஸூகூல் கிட்ட வந்துக்கிட்டு இருக்கும் போது ஆக்ஸி லேட்டர் வயர் கட்டாகிருச்சின்னு கூப்புடீங்களே ஞாபகம் இருக்கா,அப்ப மணி என்னன்னு தெரியுமா,ராத்திரி பதினோரு மணி,பையன்க எல்லாம் கடிஅய மூடிக்கிட்டு போயிட்டாங்க,நனும் வீட்டுக்குப்போயி அப்பத்தான் கையக்காலக் கழுவீட்டு இருக்கேன்,கூட்டூட்டீங்க, நல்லபசி, அன்னைக்கி மதியம் வேற சாப்புடல,நாலு ஒர்க ஷாப்புல வேலைக்கி இருந்தப்பத்தான் நேரத்துக்கு சாப்புட முடியாமப்போச்சின்னா,ஒருவொர்க்‌ஷாப்புக்கு ஓனரான ப்பொறகும் சாப்புட முடியாமப்போறதுஅதவிடகொடுமையிலும்கொடுமைதான் போன்னு நெனைச்சிக்கிட்டு கூட வேலை பாக்குற பையனையும் கூட்டிக்கிட்டு வேகு வேகுன்னு வந்தா நீங்க பாவம் அந்த அத்துவான வேளையில வண்டிய உருட்டிக்கிட்டு அந்துக்கிட்டு இருக்கீங்க பாவம்,,,,,

வண்டிய டோ பண்ணிட்டிட்டு வரும்போது திக்குதிக்குன்னுதான் நடந்து வந்தேன்னுசொன்னீங்க,எதுக்குப்பாவம் அப்பிடியெல்லாம கஷ்டப்பட்டுக் கிட்டு,பாம்பு நெளிய பயப்படுற நேரத்துல ஒத்தையா அந்த அத்துவான ரோட்டுலயெல்லாம் வந்துக்கிட்டு,,,,

அது போல இன்னொரு தடவை நடந்துரக்கூடாதுன்னுதான் சொல்றேன் சார்,புது வண்டி வாங்குங்கன்னு,இனி இந்த வண்டியில தாங்குறதுக்கு இதுக்கு மேல பெரிசா ஒண்ணும் யெசக்கு இல்ல,

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கூடசரிசரின்னு தலையத்தலைய ஆடிக் கிட்டு பேசாம போனிங்கன்னு வையிங்க ,திரும்பவும் ஒருக்க ஆக்ஸிலேட்டர் வயர் கட்டாகி எங்காவது நடு காட்டுல நின்னுக்கிட்டு இருப்பீங்க பாத்துக்கங்க ஆமாம்எனஅன்று சொன்னஒர்க்க்ஷாப்க்காரரின் பேச்சு இன்றும் மனம் கொண்டு நிற்பதாக,,/

சின்னமகளுக்குஸூகூட்டிவாங்க வேண்டும் என ஆசை,பெரிய வண்டிதான் தனக்கு ஏற்றது என இவன் நினைக்கிறான்,

பெரிவயவனும் ஸ்கூட்டியே வாங்கிக்கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு ஏற்றது,இனிமேல்பெரியவண்டிஓட்டுகிறவயதில்லை உங்களுக்கு என்கிறான், அப்படி என்ன வயதாகிவிட்டது இவனுக்கு எனத்தெரியவில் லை.ஐம்பத்தி ஆறு ஒரு வயதா,,அறுபது வயதிற்கு மேலானாவர்கள் காற்றில் இருசக்கர வாகனம்ஓட்டிச்செல்பவர்களைநிறையதடவைபார்த்திருக்கிறான்,பார்த்திருக்கிறான் என்ன பார்த்து வியந்திருக்கிறான்.

அந்த வியப்பு பொய்யில்லை நிஜமே,அதைச்செய்ய நம்மால் என்ன இயலா தா என்கிற எண்ணம் மேலோங்க பழைய மாடல் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி ஓட்டிக்கொண்டு திரிந்தான் சிறிது நாள்,சரிவரவில்லை அது என அதை விற்ற தினத்திலிருந்து இன்று வரை பெரிய வண்டியை ஓட்டிப் பார்த்ததில்லை.

சொந்தமாக வாங்கு பொழுது ஒட்டிக்கொள்ளலாம் என இருந்துவிட்டான்.

ஒயின் ஷாப்பிற்கு எதிர்த்தாற் போல் இருக்கிற திருமண மண்டபத்தின் பின்னால் என்றார்கள்,

இப்பொழுது வேறு எதையும் விட ஒயின் ஷாப் நல்ல அடையாளமாக ஆகித்தெரிகிறது,

பின்னால் இருந்த மூன்று மண்டபங்களில் எது எனச் சரியாகச் சொல்ல வில்லை,ஒரு வேளை அவர்கள் சொல்லி இவன் கவனிக்கவில்லையோ என்னவோ,,,?

வேறு வழி ஒவ்வொரு மண்டபமாய் ஏறி இறங்க வேண்டியதுதான்,

அருப்புக்கோட்டைரோடு இவனது வீட்டிலிருந்து மூன்றுகிலோமீட்டர்கள் இருக்கலாம்,

இருசக்கரவாகனம் இருந்தால் போய் வருவது ஈஸி,பஸ்ஸிற்காய்க் காத்திருந் தால் காலம் போய் விடும்.

இங்கிருந்துபஸ்டாண்ட் சென்று அங்கிருந்து அருப்புக்கோட்டை ரோடு வழியாக செல்கிற பஸ்ஸாய் பார்த்து விழி கழண்டு விழ காத்துக் கிடக்க வேண்டும்.கழண்டவிழிதற்செயலாய் எங்காவதுபார்த்துக்கொண்டிருந்தால் வந்த பஸ் விருட்டென காணாமல் போய் விடும் வந்த வேகத்தில் /

இங்கிருந்து கால் மணி நேரம் பஸ்டாண்ட் செல்ல,அங்கிருந்து கால் மணி அருப்புக்கோட்டைசாலைசெல்ல,,,,இவைஇரண்டிற்குமாய்செல்லபஸ்ஸிற்காய் காத்திருக்கிற நேரம் பத்தும் பத்துமாய் இருபது நிமிடங்கள் வைத்தால் கூட ஐம்பதுநிமிடம்,ஆகிப்போகிறதுதான்,அதில்ஐந்துநிமிடம்குறைத்தால் முக்கால் மணி நேரம்,அந்த முக்கால் மணியின் பாதியை கையில்பிடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து விடலாம்,

அதிலும் பஜார் வழியாக போய் வந்தால் தேவையானதை வாங்கிக் கொள்ள லாம்.

தேவையானது என பஜாரில் இவன் வாங்குவது காய்கறிகள் மட்டுமே,,/ பேஜார் இல்லாத பஜாராய் அதை பார்க்க முடிந்ததால் அங்கு காய்கறி வாங்கிக்கொள்ள இவனுக்குப்பிடிக்கிறது,

நேற்றைக்கு முன் தினம் அந்த அக்காதான் அழைப்புச்சொல்ல வந்திருந்தார் கள் வீட்டிற்கு, அவர்கள் வரும் போது காலையில் மணி ஏழு இருக்கும்,

ஏழு மணியைஎட்டிப்பிடிக்க இன்னும் ஐந்துநிமிடம் இருந்தது, ஒரு ஞாபக த்திற்காய் அப்படி வைத்துக் கொள்ளலாம்.என்றாள், கடிகாரத்தைப்பார்த்து விட்டும் மனக் கணக்காயும்.,,/

ஏன் வாசலோட நின்னுட்டீங்க,உள்ள வரவேண்டியதுதான இதுக்கு எதுக்கு அனுமதியெல்லாம் கேட்டுக்கிட்டு,ஒங்க வீடு போல இல்லையா இது என்ற இவனது பேச்சிற்க்கு பலமெடுத்துசிரித்தவள் ”சும்மா கெடடா கிறுக்கா,,, கிறுக்கன்மாதிரிபேசிக்கிட்டு,,,வாடா,போடான்னுகூப்புடலாமுல்லாப்பா,,அதுக்கு அனுமதி உண்டா இல்லை அதுவும் கெடையாதா சொல்லீரு என அவள் கேட்ட நேரம் கொஞ்சம் அமைதியானவன் சுதாரித்து அட போங்கக்கா, நீங்க கூப்புடாமயாருஎன்னய,கூப்புடப்போறா,,,எங்கஅம்மாவுக்கு அடுத்து நீங்கதான அப்பிடி கூப்புட வாய்ச்ச மனுசியா தென்படுறீங்க,இந்த விஷயத்துல நான் குடுத்துவச்சிருக்கணுமுக்கா,இது போல உரிமையோட கூப்புட, பேச, கோவிச்சிக்கிற, மனசுக்குள்ள இல்ல,வெளிபடையா வையிற துக்கு யாரு இருக்கா சொல்லுங்க,,,என்றவனாய் சரி வாங்க வீட்டுக்குள்ள வாசல்லயே நின்னுபேசிக்கிட்டுஇருந்தாஎப்பிடி,,,?பாக்குறவுங்கஎன்னையதப்பாநெனைக்கப் போறாங்க, என்னடா இவன் வீட்டுக் வந்தவுங்கள வாசல்லயே நிக்கவச்சி பேசிக் கிட்டுஇருக்கான்னு,,,,/”

”எதுக்குடா அப்பிடியெல்லாம் பேசப் போறாங்க,நீ என்ன எனக்கு அந்நியமான ஆளா,இல்ல நான் என்ன ஒனக்கு அந்நியமான ஆளா சொல்லு,,,,,,எனக்கு ஒரு டம்பளர் பச்சை தண்ணி குடுத்து இப்பிடியே வாசலோட அனுப்புனாக் கூட சந்தோசம்தான்,

“தெரியும்இந்நேரம்வந்தாபுள்ளைங்கஎந்திரிச்சிருக்கக்கூடமாட்டாங்காங்குற சந்தேகத்துலதான் வந்தேன், நீயே இன்னைக்கு என்னமோ அதிசியமா எந்திரிச்சி வந்து வாசல்ல நிக்கிற/ இந்த அக்காவ கூப்புட,,

“கேள்விப்பட்டேன், ராத்திரிக்கி சீக்கிரம் தூங்குறதில்லையாம், காலையில லேட்டாத்தான்எந்திக்கிறயாம்,சொல்றாங்க,,,அப்பிடிஎன்ன தேவை இருக்கு ஒனக்கு,ராத்திரிக்கு முழிக்கிற அளவுக்கு பகல்ல தூங்கிப்போற அளவுக்கு, ஒடம்பத்துக்க,அத விட்டுறாத ,சொவரு இருந்தாத்தானன்னு சொல்லாட்டிக் கூட நம்ம தெம்பா இருந்தாத்தான மத்தவுங்கள இழுக்க முடியும், ஊருக்கா கவும், பொதுவுக்காவும் ஓடிக்கிட்டுத்திரியிறது கொஞ்சம் இனிக்கும்தான், கொஞ்சம் சந்தோஷமாகூட இருக்கும்தான். ஒன்னைய யாரும் அதெல்லாம் செய்ய வேணாமுன்னு சொல்லல,செஞ்சிக்க ஒனக்கு சந்தோஷமாவும் ஞாயமுன்னு படுறத தவிர்த்து நீ ஒண்ணும் தப்ப பண்ணீறப்போறதில்ல, என்ன பொதுவுங்குறது நாலுபேரு சேந்ததுதான,நாலுல ஒருத்தரு கொஞ்சம் யெசக்கேட்டுக்குஉட்பட்டுட்டருன்னாக்கூட அதுக்கு நீயும் ஒரு ஆளா சப்போடபண்ணிநிக்கணும்.போயிமனசாட்சிஉறுத்தித்திங்கும் போதுகூட,,,/

“எப்பயும் நிக்கிற தரை முக்கியமில்லையா, காலுக்குக்கீழ நழுவிக்கிட்டு இருந்தா அது தரை கெடையாதுதான,அலித்தரைதான,அத நம்பி இருந்துறக் கூடாதுன்னுதான்சொல்றேன்,ஆனாநீஅப்பியெல்லாம்போறஆளு கெடையாது தெரியும்,இருந்தாலும் சொன்னேன் என்றவள் ஆனா நீ இது போல ஊரு பொதுவுன்னு ஓடிக்கிட்டு திரியிறதுன்னு ஆனதுக்கு அப்புறம்தான் நெறைய கத்துவச்சிருக்குற ,அது சரி அனுபவமும்,காலமும் கத்துக்குடுக்குற அளவுக்கு இங்கயாருசொல்லிக்குடுக்கப்போறா,காலம்ஒருசிறந்தஆசிரியன்,கணக்கீட்டாளன், நல்ல மருந்துன்னு ,,இன்னும் இன்னும் நெறைய சொல்வாங்கப்பா,,,,இந்த அக்காசொல்றதவிடகாலம்ஒனக்குநெறைய சொல்லித்தரும்,நீயும் காலத்தின் நூலப்புடிச்சிமேலஏறிவந்துகத்துக்குருவ,ஒன்னையபுனரமைச்சிக்கிறுவன்னுதா இவ்வளவும் பேசுறேன்,புனரமைச்சிக்கிறுவ நீ,கண்டிப்பா,,,/,

”இவ்வளவுதூரம்ஓங்கிட்டபேசுறதுக்குவிஷயம்இருந்தாலும்கூடஒன்னையப் பாக்குறதுக்குக்கொஞ்சம் பொறாமையா இருக்குடா,குடியிருக்க சின்னதா ஒரு வீடு, அளவான குடும்பம்,பெரிய அளவுலான சண்ட சச்சரவுன்னு இது நா வரைக்கும்ஒங்களுக்குள்ள பெரிசா விரிசல் விழுந்துறாத தாம்பத்தியம். சின்ன சின்ன சச்சரவுகளத்தவிர்த்து,,,,அது இல்லைன்னா குடும்பம் இனிப்பு இல்லையில்ல,,,,வாசல்ல போடுற கோலத்துக்கு வைக்கிற புள்ளிகளப் போல அதெல்லாம்இருக்கும்தான்.என்னவச்சபுள்ளிகளோட அர்த்தமும் அடர்த்தியும் கொளஞ்சிறாம பாத்துக்கிட்டு வர்ற பாத்தியா அதுக்கும் சேத்து இந்த அக்கா தலை வணங்குறேன்டா,,,,/,

”என்னயப்பாக்குறவுங்களெல்லாம்கேக்குறாங்கடா,ஏங்கிட்டபேசுறபத்துலஎட்டுப் பேராவது ஒங் கல்யாணம் ல்வ் மேராஜான்னு கேக்குறாங்க, அவங்க கிட்டயெ ல்லாம் சொல்றேன் அவுங்களது லவ் மேரேஜ் இல்லை,மேரேஜ் லவ்வுன்னு, கல்யாணத்துக்கு அப்புறமும் அன்பு கொறையாம காதலிக்க வாச்சிருக்குற அன்பு ஜோடிக அவுங்கன்னு சொல்வேன்,,,,,” என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தவள் இவன் மனைவி கொண்டு வந்த டீ டம்ப்ளரை வாங்கியவாறே ”என்னதிது டீயா,டீன்னா எனக்குப்பிடிக்கும்,ஆனா எங்க வீட்டுல காபிதான் போடுவோம்,

“காபி,காபி,,காபி,,,ஒரே காபிதான்,நின்னா காபி,உக்காந்தா காபி படுத்தா காபின்னுஆகிப்போனகாபி ஒலகம்,,வீட்டுக்காரருக்குப் புடிக்கும்ங்குறதால நானும் காபி குடிக்க பழகிக்கிட்டேன், கட்டாயத்துக்குட்பட்டுதான்னாலும் கூட அப்பிடித்தான் பழகிக்கிற வேண்டியதாகிப் போனேன்,

”கல்யாணம் ஆன மறு நாளையில இருந்து எங்களோட ஆசை பாசங்கள மூட்டகட்டிவச்சோகுழிதோண்டிபொதைச்சோதான் ஆக வேண்டியதிருக்கு. இல்லை அது முடியாதுன்னு மல்லுக்கு நின்னா குடும்பம்பத்துகாக இது கூடவாகாம்ப்ரமைஸ்பண்ணிக்கிறகூடாதுன்னுஒரு அசரீரி கனமா ஒலிக்குது ஆண்கள் ஒலகத்துல இருந்து,என்ன செய்ய சரின்னு அடங்கிப் போயிருறவு ங்களா ஆகிப்போறம், அதுல நானும் ஒருத்தியா இப்ப ஓங் முன்னாடி நிக்கிறேன்,,,,” என்றவள் இன்னும் கொஞ்சம் டீக்கெடைக்குமா என்கிற உரிமையுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்,,,,,,/

”யப்பா எதுன்னா வித்தை எதும் கத்து வச்சிருக்கையாப்பா,”என்றாள் இவன் மனைவியைப் பார்த்து,,,,,எடுத்தது எடுத்த எடுத்துல,வச்சது வச்ச எடுத்துல அப்பிடியேஅச்சுப்பெசகாமஇருக்கேப்பா,.,,,,பாத்திரமெல்லாம்இப்பத்தான் வாங்குனபுதுப்பாத்திரம் போல இருக்கேப்பா, எப்பிடியும் காலையில எந்திரிச்சி அடுப்பப்பத்தவச்சிருப்ப,இந்தாடீப்போட்டுஎனக்குகுடுத்துருக்குற, நீங்களும் குடிச்சிருப்பீங்க,ஏங் தம்பி வழக்கம் போல ரெண்டு டம்ப்ளர் டீ வாங்கிக் குடிச்சிருப்பான்.அவன்கடைக்கிப்போனாலேடீக்கிடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டீ, டீக்குடிக்கும் போது ஒரு டீ,டீக்குடிச்சப் பின்னாடி ஒரு டீன்னு குடிக்கிற ஆளு,,,கேட்டாஅதுக்குஒருவிளக்கம்சொல்லுவான்,நாவோடசுவைறும்புகள்ல பட்டு ஒவ்வொரு மிடறா உள்ள போற டீ ஒடம்பையும் மனசையும் இணைக்கிற பாலம்ன்னுவான்.அப்படியாப்பட்ட ஆளு அவனுக்கு டீபோடும் போது  நீங்க ரெண்டு பேருக்கும் புள்ளைங் களுக்காவும் டீ ஆத்தும் போது சிந்தி செதறி அடுக்கள மேடை முழுசுமா அடையாளம் காத்துக்கெடக்காம இப்பிடி நீட்டா தொடச்சி வச்சிட்டு ஏதோ அந்தரத்துல இருந்து எல்லாம் வந்தது போலவும் மந்துரத்துல பழுத்த மாங்கா போலவுமா இருக்கே,,இதுக்கே ஒன்னையப்பாராட்டணுப்பா,,,,,,மனசாரவும்வயாரவுமா,,,,,,” எனச் சொல்லியள் அடுத்துக்குடுத்த டீயை க்குடித்து விட்டு டப்ளரை கீழே வைத்தாள்,

அப்புறம் காலையில என்ன டிபனா வழக்கம் போல சாப்பாடா எனக் கேட்டவள் புள்ளைங்க இன்னும் தூங்குதுக போல,,,/

”காலகாலத்துலஎழுப்பிவிடுங்க,நம்மஇன்னும் சோம்பிப்போகலாம் ,ஆனா புள்ளைங்க சோம்பி திரியக்கூடாது, மொட்டா இருக்குறதுங்க பூவா மலர காத்துக்கிட்டுஇருக்காங்க,அவுங்களமலரவிடுவோம்,தாராளமா,,,”என்றவள் பிசைந்து வைத்திந்த மாவைப்பார்த்து விட்டு என்ன பூரிக்குப் போடப் போறீங்களா,,,,,என்றவளாய் மருமகளுக்கு வலைகாப்பு வச்சிருக்கேன்,என தேதி, இடம்,நேரம் எனச் சொல்லி விட்டு பூரி சுட்டு முடிச்சவுடனேயே அக்காவுக்கு ரெண்டு பூரிகொண்டாடா என்றவளாய் வெளியேறினாள். வீட்டை விட்டு/

கண்களில் நிறைகொண்ட நீருடன் அவள் சென்றதையே பார்த்துக் கொண்டி ருக்கிறான் இவன்,,,/

புதன், 25 டிசம்பர், 2019

தாமதங்களின் முன்னறிவிப்பாய்,,,,,

கொஞ்சம்தாமதமாகிப்போகிறதுமன்னிக்கவும்.மன்னிப்புக்கேட்கவும்மன்னிப்புக் கொடுக்கவும் ஒரு தனி மனது வேண்டும் போலும்,அது தேவையான அளவி ற்கு இருப்பு இருக்கிறதுதான்,

சடுதி எடுத்த மனதுடன் காலை நேரம் சிறிதே அவசரம் காட்டி எழுகிற போது செய்துவைக்கப்பட்டிருந்தசின்னமுள்ளும்,பெரியமுள்ளும்கூடவே ஸ்நேகிதச் சிரிப்புடனாய் இணை சேர்ந்துக்கொண்ட விநாடி முள்ளும்,மணி ஏழே கால் என முன்னறிவிக்கிறது,

ஒரு கூட்டு பறவையின் குஞ்சுகள் அடைகொண்டதை போல இப்படி ஒரு கடிகாரத்த எங்க வாங்குனீங்க,என்ன வெலைக்கு வாங்குனீங்க,இது போலான கடிகாரத்த வாங்க ஒங்களாலத்தான் முடியும்,எதுக்கெடுத்தாலும் எங்க போனா லும் மாடர்ன் மாடர்ன் மாடர்ன்தான்,என கடிகாரம் வாங்கி வந்த தினத்தன்று முன் மொழிந்தாள் மனைவி/

கடிகாரத்தை பார்த்துக்கொண்டே மனமில்லாமல் எழுந்து முகம் கழுவுகிற போது கண்கள் எறிந்து சோம்பல் அகலா தூக்கம் பிடித்த முகம் முன் நிழலா டியதாய்,,,,,/

ஆடியநிழலுக்கு அர்த்தம்ஏதாகினும்உண்டா என்றால் இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். நிறையவற்றிக்கு அப்படித்தானே இருக்கிறது.

நாலுபுள்ளியும் ,எட்டுப் புள்ளியும் போய் இப்பொழுது வந்து விட்ட வரை கோலங்கள் வாசலை அலங்கரிப்பதை பார்க்க முடியவில்லைதான் இன்று/

இட்டுவைக்கப்பட்டபுள்ளிகளும்,இழுத்துவரையப்பட்டகோடுகளுமாய்அலங்க ரிக்கப்படுகிற வாசல்கள் எப்பொழுதும் கண்ணுக்கு இதமாகவே,,,,/

ஊர்ந்து திரிந்த எறும்புகளும்,பறந்து திரிந்த பறவைகளும் கோலம் வரைந்த வாசல் தாண்டிச் செல்கையில் சில விநாடி நின்று கண்ணுற்றுச்செல்வதாய் அறிந்து கொள்கிறான் தினங்களில் அவளிடமிருந்து.

இருக்கட்டும் இருக்கட்டும் என்னதான் வரைந்தாலும் என்னதான் இட்டாலும் கோலம்தானே,,,,என்கிற இவனது வம்பிழுப்பிற்கு,,என்ன அப்படிச்சொல்லி விட்டீர்கள்,,?இதுவும் ஒரு வரை கலைதானே,,,.கண்ணுற்றுப்பார்ப்பதற்கும் காதுற்று விமர்சனம் செய்வதற்கும் ஏற்ற ஒன்றாய் இருந்தால் மட்டும்தானா அது வரைகலை,பின் இதெல்லாம் எந்த விதத்தில் சேர்த்தி கூறுங்கள் மறுக் காமலும் மனம் திறந்துமாய்,,,/ என்கிற அவளது பேச்சிற்கு என்ன சொல்லி மனச்சமாதானம் செய்வது அப்போதைக்கு என்பது தெரியாமல் சொல்லற்று நின்ற போது சரி சிரமம் கொள்ளவேண்டாம் என அவளே பின் வாங்கிக் கொள்கிறாள்,சொல்லிலும் பேச்சிலிருந்துமாய்,,,/

ஆகா சரியான செயல் உன்னது,இப்படித்தான் இருக்க வேண்டும்,ஏதாவது ஒன்றிற்கு ஏதாவது ஒன்றை ஈடு கொடுக்கும் விதமாய் பேச்சும்,சமாதானமும் அமைந்து போவதுதான் நல்லது என்ற போது வாய் கொள்ளாது சிரித்தாள்,

சமாதானம்ஆகாமல் எங்கு போய்விடப்போகிறேன்,போனாலும்விட்டு விடவா போகிறீர்கள்,,?எப்பொழுதும் இறங்கி வந்து சமாதானமாகிப் போகிறவர்களும், சமரசம்பேசுகிறவர்களுமாய்குடும்பத்தில்பெண்களாகத் தானே இருக்கி றோம் என்றபடி போய் விடுகிறாள் பேசிக்கொண்டிருந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டும் கோலப்பொடிடப்பாவைஓரம் கட்டிவைத்து விட்டுமாய்,,,/

முன் காலையில் யாரும் எழுப்பாமல் எழுந்து வீட்டில் முகம் கழுவி விட்டு கடையில் போய் டீ சாப்பிட்டு விட்டு செல்கிற வழியில் மாட்ட விடுபட்டுப் போன சட்டை பட்டனை மாட்டிக்கொண்டு வாக்கிங் செல்லலாம் எனவாய் அன்றாடங்களில் மனம் முளைக்கிற எண்ணம் முளையிலேயே கருகி விடுகிறதாக அல்லது கிள்ளி எறியப்படுகிறதாக/

கருகி விட்ட எண்ணமும் கிள்ளி எறியப்பட்ட துண்டுகளின் சிதறல்களும் நடையின் பாதையெங்கும் அங்கங்கே சிதறிக்கிடப்பதாய் ,,,,,/

நல்லதுதான் ,தினமும் வாக்கிங்க் இல்லை ரன்னிங்,இல்லை சைக்கிளிங்,, இப்படி ஏதாவது ஒன்று,,,,,,ஆசை பூண்ட மனம் செயல் என வரும் போது கொஞ்சம் பின் வாங்கித்தெரிவதாய்,,,/

காரணம் என்ன சொன்ன போதிலும் சமாதானப் பட்டுக் கொள்ள முடியாது தான். முதல் நாள் இரவு படுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுப்போகிறது வாஸ்தவம்தான்.

தாமதப்படுகிற செயலைச்செய்து விட்டு தாமத்தின் மீது பழி போட்டால்,,,,,,,,,?

மூன்று சினிமாக்கள் மூன்று சேனல்களில்,,,,இடைவெளி விட்டும் பின் தொடர் ச்சியாயும் பார்த்தான்.

மூன்றும் மூணு மாதிரியாய் கதை சொன்ன படங்கள்,முதலாவது ஆறு மாதங்களுக்கு முன்னாய் ரிலீஸ் ஆன படம்,மற்றொன்று மூன்று வருடங்க ளுக்குமுன்னானபடம்,மூன்றாவதுஇருபத்தைந்துவருடங்களுக்குமுந்தையது,

மூன்று படங்களின் கதைகள்,படத்தின் நாயக நாயகிகள்,அவர்களொஇன் நடிப்பு,படத்தின்இசை,பாடல்டைரக்‌ஷன்,எனஇதரஇதரவாய்எல்லாவற்றையும் அசை போட்டு விட வாய்க்கிறது.

மூன்றும் மூன்று விதமான தளங்களில் கதை சொன்ன படங்கள் என்கிற திருப்தியுடன் படுக்கப்போன இரவு தாமதம் காட்டியதில் என்ன தவறு இருந்து விட முடியும் பெரிதாக,,/

தாமதப்பட்டுப்படுக்கிற போது வர மறுக்கிற தூக்கத்தை இமைகள் திரை கட்டி இழுத்து மூடுகிற போது படுக்கிற வேளைக்கும் தூங்கிப் போகிற வேளைக்கு மான கால இடைவெளி சற்று அதிகமாகவே ஆகித் தெரிகிறதுதான்.

படுத்தவுடனாய்தூங்கிப்போகிறவர்கள்வெகு பாக்கியவான்களே,,,/

எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்,கடை வீதியின் நெரிசல் மிகுந்த ஜன நடமாட்டத்திற்கும் பெருங்கொண்ட இரைச்சலுக்கும் நடுவில் பூட்டப்பட்ட கடையின்வாசலில்துண்டைவிரித்துப்படுத்திருக்கிறமூட்டைதூக்கும்தொழிலாளி யையும், கடினம் காட்டுகிற உடல் உழைப்பாளியையும்/

அதில் உள்ளடக்கம் கொண்ட காளியப்பண்ணனை இவனுக்குத்தெரியும்,என்ன தம்பி நல்லாயிருகையா என்பார் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்,,,,/

நல்லாயிருக்கேண்ணே என்கிற என் பதிலுக்கு இடிசிரிப்பு ஒன்றை உதிர்ப்பவர் சரி போ,காய்கறி மார்க்கெட்டுக்குத்தான வந்த அந்த வேலைய கவனி,என மார்கெட்டுக்குள்ளாய் இருக்கிற குறிப்பிட்ட கடையின் பெயர் சொல்லி அனுப் புவார்,

காளியப்பண்ணன் சொல்லிவிட்டார் என்றால் அவர்கள் கடையையே எழுதி வைத்து விடுவார்கள் போலும்.

வழக்கமாய் காய்கறி லோடுகளை மார்க்கெட்டின் அனைத்துக்கடைகளுக்கும் இறக்குபவர் காளியப்பண்ணன்,

சென்றமாதத்தின் ஒரு நாளில் காலைவேளையாய் காளியப்பண்ணன் காய்கறி லோடு இறக்கிக் கொண்டிருக்கும்போதுமுதல்மூடையைஇறக்கிக் கொண்டிருக்கையில்கொஞ்சம்சுணங்கிஇருந்தவர்மறு மூட்டை இறக்கையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்,

இறக்க வந்த மூட்டையை நின்ற நிலையிலிருந்தே அப்படியே போட்டவர் ஐயா என அவரை இருகைகளால் அள்ளி அப்படியே மூட்டையை தூக்குவது போல் தூக்கிகொண்டு இடைஞ்சலான மார்க்கெட்டின் வாசல் வரை சென்று அங்கு நின்ற ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்.

பின்னாளில் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் கடைக்காரர் சொன்னார், அன் னைக்கி ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு ஓடுன அன்னைக்கி நான் பொழைச் சதே மறு பொழப்புன்னு டாக்டர் சொன்னாரு என்றார்,

ஒங்களுக்கு அது மறு பொழப்போ என்னவோ தெரியாது மொதலாளி,எனக்கு ஒரு உபகாரம் செய்ய வாச்சிருக்கு அவ்வளவுதான்,

அப்பிடியே சாவு வந்தாலும் நாம என்ன அணைகட்டியா தடுக்க முடியு மொதலாளி,என்ன கோடி வருசத்துக்கு வரம் வாங்கியா வந்துருக்கம்,இருக்குர வரைக்கும் இருக்க வேண்டியதுதான்,நேரம் காலம் வந்தா போயி சேர வேண்டியதுதா மொதலாளி,,,,படுத்துக்கிட்டு இழுத்துக்கிட்டு பாக்குறதுக்கு ஆள் இல்லாம நாறிப்போயி படுத்த படுக்கையா கெடக்குறதுக்கு பொட்டுன்னு போய்ட்டா அது நல்ல சாவு லிஸ்ட்டுல சேந்துரும் மொதலாளி என்பவர் இப்ப என்ன மொதலாளி கொற ஒங்களுக்கு,பேரன் பேத்தி எடுத்துடீங்க,வயசும் எழுபதஎட்டப்போக்குது,இனிஎன்ன மொதலாளி,என்னயக்கேட்டா அன்னைக்கி நீங்க செத்துப்போயிருந்தாக்கூட பாக்கியந்தான்,என்பார் காளியப்பண்ணன்,

காளியப்பண்ணனைப்போன்ற உடல் உழைப்பாளிகள்,,,,,அவர்கள் வாழ்க்கை ,அவர்கள் உழைப்பு,அவர்கள் சாப்பாடு,,எல்லாமேதனிதான்,

ஜவுளிக்கடையில் கூட அவர்களுக்கென தனியாக துண்டு வைத்திருந்தார்கள் கொஞ்சம் முரடு காட்டியும் பெரியதாகவும்/ போர்வையின் நீளத்திலும் அகலத் திலும் பாதியளவாவது இருக்கும்.

காளியப்பண்ணன் துண்டு எடுக்கப்போனால் ஜவுளிக்கடைக்குப்போன அடுத்த நிமிடம் அவர் கையில் அந்தத்துண்டு இருக்கும்.

இவனைப் போலானவர்கள் போய் துண்டெடுக்கும் போது வேண்டாம் இது அதெல்லாம்காளியண்ணன்களுக்கானது.சரிப்பட்டுவராதுஉங்களுக்கு,,,என்கிற சொல் உத்திரவாதத்துடன் வேறு விதமான துண்டைஎடுத்துப் போடுவார்கள், கொஞ்சம் மிருதுவாகவும் ரகங்களில் நிறைந்து போயுமாய் இருக்கும் துண்டு களில் ஏதாவது ஒன்றை எடுத்து வருவான்.ஆனால் விலை என்னவோ அந்தத் துண்டின் விலையை அனுசரித்துத்தான் இருக்கும்,துண்டு மட்டும்தான் அப்படியா, மற்ற மற்ற விஷயங்கள் எல்லாம் அப்படித்தானா என்பது தெரிய வில்லைஎனகாளியப்பண்ணனிடம்கேட்கிறபோது,,மத்தவிஷயங்கள்ல,,, எங்க சாப்பாடு இங்க ரொம்ப முக்கியம் காட்டுது என்பார்,

இவனைப் போலவோ இல்லை இன்னும் சிலரைப்போலவோ கொஞ்சம் சிறுத்துச் சாப்பிட்டு விட இயலாது.காளியண்ணன் போன்றவர்களால், அவர்க ளுக்கு அது காணாது, சொளப்பொரியாகிப்போகும்,

வேலை செய்கிற உடல் மூளை இடுகிற கட்டளையை உடலின் சகல பாகங்களுக்குமாய் அனுப்பி உடலின் சகல பாகங்களையும் கூட்டிணைத்து வேலை செய்ய வைப்பதை உறுதி செய்யும் போதும்,ரத்தத்தை வியர்வை யாக்கி உடலெங்குமாய் வரி காட்டி வடிய வைக்கிற போதிலும் தேவைப் படுகிற உடலின் தேவைக்கு சாதாரண சாப்பாடெல்லாம் அவர்களுக்கு காணாமல் போய் விடுகிறதுதான்,

அதற்காய் அவர்கள் தினமுமாய் சிக்கன் மட்டன் என எடுத்துச்சாப்பிட்டு விட முடியாது,வேறு என்னதான் செய்வது உடலுக்கு உறமூட்ட சத்தாய் ஏதாவது உணவு சாப்பிடத்தான் வேண்டும்,இழந்துபோன கலோரிகளை ஈடு செய்ய அவர்களுக்குக்கிடைத்த எளிய சத்தான உணவு மொச்சைதான்,

மொச்சை மற்றும் சுண்டல் பாசிப்பயறு மற்றும் பூரி வடை எனவரிசைகட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்உணவுவகைகளைதேர்ந்தெடுத்துதினசரி மாலை வேளைகளில் சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இவனுக்குத் தெரிந்து மதுரை ரோட்டின் இறக்கத்தில்தான் அந்தக்கடை இருந்தது,

இறக்கத்தின்வலது பக்கம் காட்டி வீற்றிருக்கிறகடையில்தான்இவை எல்லாம் கிடைக்கும். அந்தக் கடைக்கும் அவர்களுக்கு எப்பொழுதும் மிகப்பெரிய பந்தம் இருந்தது.

தினசரி மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த இடத்தில் ட்ராபிக் ஜாம் ஆகி விடுகிற அளவிற்காய் மூடை தூக்கும் தொழிலாளர்களின் கூட்டம் இருக்கும், காளியப்பண்ணனை உள்ளடக்கி,,,/

கையகலதட்டு ஒன்றில் ஆளுக்கு இரண்டு மொச்சையை வாங்கி உடன் பருப்பு வடை ஒன்றை எடுத்து பிச்சிப்போடுவார்கள்,போட்ட கணத்தில் பின்னாடியே அவற்றின் தலை நனைக்கிற சட்னியையும் சாம்பாரையும் சேர்த்துப் பிசைத்து சாப்பிட்ட பின் ஆளுக்கு இரண்டு அல்லது நான்கு பூரிகள் கூடவே துணைக்கு இன்னொரு மொச்சை அல்லது தட்டாம் பயறு,அதற்கும் இருக்கவே இருக்கிற சட்னியும் சாம்பாரும்/ இதுதான் அவர்களது மாலை நேரத்து டிபன்.இரவு வீடு போவது வரை தாங்கும் அது.

அவர்களது அன்றாடங்களின் கடுமையான உடல் உழைப்பிற்கும், அவர்களு க்குக் கிடைக்கிற கூலிக்கும் தினம் அவர்கள் மட்டனும் சிக்கனுமா சாப்பிட்டு உடம்பை தேற்றிக்கொள்ள முடியும்,

அதற்கான மாற்று வழியாய் அம்புக்குறியிடப்பட்ட அது போலான மூன்று கடைகள் நகரின் வேறுவேறான இடங்களில் இருந்தன, அந்த மூன்றிலுமாய் குறைந்த விலைக்கு கிடைத்த புரதச்சத்தை தேடிப்போய் வாங்கி உண்டது அவர்களாய்த்தான் இருந்தார்கள்.

அவர்கள் தவிர்த்து வாங்கி உண்டவர்கள் மிகவும் குறைவுதான் காளியப்பண் ணனை சேர்த்து./

அது போலான ஓர் நாளில் இவனும் அந்தக்கடையின் எதிர் திசையில் இருக்கிற டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டே கடையை உற்று நோக்கி விட்டு அவர்களது வாடிக்கையாளர்கள் சென்றவுடன் இவன் சென்று கடைக் காரரிடம் கேட்கிறான்.

அவர்களுக்கு யாருக்காவது கொடுத்த பண்டத்தை அப்படியே எனக்கும் பார்சல் கட்டிக் கொடுங்கள். வீட்டில்போய் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்ற போது கடைக்காரர் சொல்கிறார்.

“அண்ணே இது நீங்க நெனைக்கிறது போல செரிக்காது. அவுங்க சாப்புட்டது போல சாப்புடணுமுன்னா ஒண்ணு கனமான வேலை செய்யணும்,இல்ல கொஞ்சம் ஓடியாடியாவது திரியணும்,ஒங்க வயசுக்கு சும்மா ஒக்காந்துக் கிட்டு சாப்புடணுமுன்னு நெனைச்சா ஒடம்புல ஏதாவது ஒரு பக்கம் வீங்கிப் போயி நிக்கும்ண்ணே பாத்துக்கங்க,

அது தவிர தின்னது செரிக்காம வயித்துக்கும் நெஞ்சிக்கும் ஒரு பஸ்ஸீ போல ஒடிக்கிட்டு இருக்கும் பாத்துக்கங்க,ஆட்களே இல்லாத வெத்து பஸ்ஸா ஓடிக்கிட்டு இருக்குறதுல என்ன பெருமை இருந்துற முடியும்,தவிர அப்பிடி ஓடுறதுல வர்ற உடல் யெடைஞ்சல் எவ்வளவு சொல்லுங்க,,,,,?என அவர் கேட்ட ஐந்து வருடங்களின் கடைசியில் இப்பொழுதுமொச்சையும் வடையும் வாங்கிச்சாப்பிட்ட காளியப்பண்ணன்கள் அரிதாகிப் போனார்கள், மொச்சை யும் வடையும் விற்ற கடையும் இப்பொழுது காணக் கிடைக்கவில்லை, இன்று போய் பார்க்க வேண்டும்.

திங்கள், 11 நவம்பர், 2019

பூப்பூவாய்,,,,

”பஜாருக்கா போறீங்க,”என மனைவி கேட்ட பொழுது மணியைப் பார்க்கிறான். மணி ஒன்பது ஐம்பது,/

சின்னதும் பெரியதுமான முட்கள்இரண்டும் ஸ்னேத்துச் சிரித்து அன்பான பார்வையால் அரவணைத்து விநாடி முள்ளை துணைக்குஅழைத்துக் கொண்டு காட்டிய நேரம் சரிதானா என தொலைக்காட்சியில் மணியை சரி பார்த்துக் கொண்டேபதில்ச்சொன்னான் மனைவிக்கு,/

”நீங்கதான் காலையில வெள்ளன எந்திரிக்கிற ஆளா,காலையில அஞ்சரை மணிக்கெல்லாம் எந்திரிச்சி வாக்கிங்க் போகணும் ,கூடவே ரன்னிங்க், சைக்கி ளிங்,அது இதுன்னு,,,,கதை பேசீட்டு இப்பிடி ஒன்பது மணி வரைக்கும் கவுந்த டிச்சிட்டுப் படுத்துருந்தா எப்பிடி,,,/?”

”தப்புதாம்மா,அது ஒரு மந்தமான சொகமாகிப்போச்சி,அதுக்கு ஒடம்பு பழகிப் போச்சா இல்ல நான் அப்பிடி மனச ஆக்கி வச்சிருக்கேனான்னு தெரியல, சீக்கிரம் எந்திரிக்கணும்,,,,எந்திரிக்கணுமுன்னு நெனைக்கிற அன்னைக்கித் தான் கூடுதலா தூக்கம் வருது.என்ன செய்ய அத மீறி எந்திரிச்சா அன்னைக்கி பகல்பொழுது கெட்டுப்போகுது, அதுனாலத்தான் அப்பிடியா இருக்க வேண்டியிருக்கு, மாத்திக்கணுந்தான்,இந்தப் பழக்கத்த, சில பேரப்பாத்தா தினமும் காலை யில தவறாம ஐஞ்சரை ஆறுமணிக்கெ ல்லா ம் எந்திரிச்சி வாக்கிங் போக ஆரம்பிச்சிருறாங்க, இன்னும் சில பேர பாக்குறேன்,மொத நாளு நைட்டு லேட்டா தூங்குறவுங்க மறு நா எட்டு மணி ஏழு மணிக்குகூட வாக்கிங்க் போறத பாத்துருக்கேன்,அது மாதிரி கூட போகலாமுன்னு பாத்தா நேரம் வாய்க்கமாட்டேங்குது,அப்ப வாக்கிங் போயிக்கிட்டு இருந்தோமுன்னா வேலை க்குபோறதுக்குபஸ்ஸேற முடியாது,பஸ்ஸ விட்டுட்டு நிக்க வேண்டியதுதான், அப்புறம் டூ வீலர எடுத்துக்கிட்டு ஓடணும்,அது எதுக்கு அவ்வளவு தூரத்துக்கு டூ வீலர் ஓட்டிக்கிட்டு செரமப்பட்டுக்கிட்டு,,,?அதுக்கு பேசாம பஸ்ஸீல போயிக்கிறது உத்தமம்,

பஸ்ஸீல போனா இருபதும் இருபதும் நாப்பது ரூபாயோட முடிஞ்சி போச்சி, அதேது டூவீலர்ல போனா நித்தம் நூறு ரூபாக்கு பெட்ரொல் உத்த வேண்டியி ருக்கு ,அது போக வண்டிக்கு தேய்மானச் செலவு வேற,டீ காப்பி செலவு எப்பயும் போலதா,,,,”

”டீக்கடைன்னு சொல்லும் போதுதான் ஞாபகம் வருது,நம்ம ஊர்லயி ருந்துதான் அங்க இருக்குற டீக்கடைக்கி வேலைக்கி வர்றாரு நல்ல சாம்யண்ணன். அந்தக்கடைக்கு டீ மாஸ்டரும் அவருதான்,சமயத்துல ஆளு இல்லாத நேரத் துல வடை மாஸ்டராவும் மாறி நிப்பாரு,காலையில நாலு மணிக்கு மொத பஸ் ஏறுவாராம்,இங்க வர அரைஅல்லது முக்கா மணிநேரம், வந்ததுலயிருந்து டீ ஆத்துறவரு அவரு சிப்ட்டுமுடியிற நேரம்ந்தான் டீ ஆத்துற கப்ப கீழ வைப்பாரு.

’நானும் கடந்த ரெண்டு நாளா பாக்குறேன், காலையிலயும் சாய்ங்காலமும் நமக்கு அந்தக் கடையில தான ரெகுலரா டீ/’

’ஒரு நாள் ஆளக்காணமுன்ன ஒடனே எங்கயாவது போயிருப்பாருன்னு நெனைச்சேன்,ஆனாரெண்டாவதுநாளும்ஆளக்காணோம்,வேற மாஸ்டர்தான் நின்னாரு, எனக்குன்னா டீக்குடிக்கக்கூட மனசு ஒப்பல,’

’அவரோடடீப்போடுறடேஸ்ட்நல்லாயிருக்கும்,அதுனாலயே அவரு கடையில் நிக்கும் போதும்,வேற மாஸ்டர் கடையில நிக்கும் போதும் டீக்குடிக்க வர்ற ஆள்களோட எண்ணிக்கை வித்தியாசம் இருக்கும்,அது போக அவரோட பேச்சு நடவடிக்கை,அணுகுமுறை எல்லாத்துலயும் வித்தியாசம் இருக்கும், அதுக்காக வே ஆள்கள் கொஞ்சம் பேரு விரும்பி டீக்குடிக்க வருவாங்க,”

”எனக்கும் அவரு இல்லாத கடையில டீக்குடிக்கிறதுக்கு ஒரு மாதிரிதா இருந் துச்சி, சரி என்ன செய்யிறது,காசு குடுத்தாச்சி ,டோக்கன் வாங்கியாச்சின்னு மனசப் பொத்திக்கிட்டு டீக்குடிச்சிட்டு வர வேண்டியதா ஆகிப்போச்சி/”

”அவரில்லாத கடைக்கி எதுக்குன்னு ஒரு ரெண்டு நாளு போனா அவருதான் டீ ஆத்திக்குடுத்தாரு,என்ன மாஸ்டர் லீவா,ஆளையே காணமே ரெண்டு மூணு நாளான்னு கேட்டப்ப ஆமா சார்,நெலைம ஒன்னும் சீரா இல்ல,அதுதான் லீவு போட்டுட்டு போயிட்டேன்”என்றார்.

அதற்கப்புறம்தான் தெரிந்தது,உடன் வேலை பார்க்கிற மற்ற இரண்டு மாஸ் டர்கள் இவரைப்பற்றி கடை முதலாளியிடம் வைத்த வத்தி புகைய ஆரம்பித் திருக்கிறது.புகையின்விரிவு பறந்து பறந்து நாசி கண் இமை எல்லாம் உறுத்த கடைமுதலாளிஉடனடிகமிஷன்ஒன்றைநியமனம்செய்து விசாரணையையும் ஆரம்பித்து விட்டார் தானே விசாரணையாளராய் இருந்து/

கடைமுதலாளிக்குநன்றாய் தெரியும்.மாஸ்டர்கள் மூன்று பேரில் யார் எப்படிப் பட்டவர் என ,

ஆனாலும் அவர் கடையின் தற்போதைய நிலையை அனுசரிக்க வேண்டிய திருக்கிறது.அதனால்தான் அவர்கள் முன் வைபவர் போல் வைது விட்டு அவர்கள் போனதும் மாஸ்டர் வீட்டுக்குக்கிளம்பும் ஒரு நாள் இரவாய் கூப்பிட்டுப்பேசியிருக்கிறார்,

“இந்தா பாருப்பா,நீ ஒண்ணும் எனக்கு ஆகாத ஆளுமில்ல, அவுங்க ரெண்டு பேரும்எனக்கு பெரிய ஆள்களும் கெடையாது, எனக்கும்தெரியத்தா செய்யிது, யாரோட வேலையில கள்ளம் இருக்கு, யாரோட வேலைநல்லாயிருக்கு, நீ டீஆத்தும்போது எவ்வளவு கூட்டம் வருது, அவுங்க டீ ஆத்தும் போது வர்ற ஆட்களோட எண்ணிக்கை எவ்வளவுன்னு ஒரு கணக்கு எனக்கும் தெரியத் தான் செய்யிது,அது போக அவுங்க ரெண்டு பேரும் ஈர பேனாக்கி பேன பெருமாளாக்கி அவருகூட சம்பந்தமும் பேசுற ஆள்க,அதுனால அவுங்க அப்பிடித்தான் இருப்பாங்க.அது போக அவுங்க மனசும் புத்தி ஓட்டமும் வேற ,ஓங் மனசும் புத்தி ஓட்டமும் வேற,அதுனாலத்தான் அவுங்க கையில எடுக்குறகாரியம்தோத்துப்போகுது,நீகையிலஎடுக்குறகாரியம்ஜெயிக்குது,மனசு நல்லாயிருந்தா எல்லாம் நல்லாயிருக்கும், அது குப்பையாகி போச்சின்னா எல்லாம் குப்பைதான இல்லையா,

இல்லண்ணாச்சி ,நீங்க சொல்றது எனக்கு தெரியத்தான் செய்யுது,ஆனா ரொம்பத்தான போட்டு புண் படுத்துறாங்க அண்ணாச்சி,

என்னமோ இவிங்கதான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியும் எனக்கு எதுவும் தெரியாதது போலவுமா காட்டிக்கிறாங்க,

அவுங்க பேசுறது,நடந்துக்குறது,ஒங்ககிட்ட வந்து வத்தி வைக்கிறது எல்லாம் பாத்துக்கிட்டும்,கேட்டுக்கிட்டும்,உணர்ந்துக்கிட்டும்தான் இருக்கேன்.

இருந்தாலும் நானும் அவுங்களப்போல யெறங்குனா பின்ன அவுங்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போயிருமுங்குறதுக்காகத்தான் அதச்செய்யிற தில்ல,,,,,,,எனச் சொன்ன டீ மாஸ்டரை ஆற்றுப்படுத்திய முதலாளி,,,,நீ ஒண்ணும் கவலைப்படாத இனிமே அவுங்க ரெண்டு பேரையும் ஓங் விஷயத் துல தலையிட விடாம நான் பாத்துக்கிறேன்,,என்றவர்

”நீ இந்தக் கடைக்கு டீ மாஸ்டரா மட்டும் இல்லாம கொஞ்சம் எல்லாமாவும் மாறி நிக்கிற/போன வாரத்துல மாசக் கணக்குல டீ பாக்கி வச்சிருந்த ஒருத்தன்கிட்ட நாங்களே வாங்க முடியாத ஒரு மாச பழைய டீ பாக்கிய நீ பேசி வாங்கிக்குடுத்துட்ட,இது மாதிரி விஷயத்துக்காகவாவது நீ எங்களோட இருக்கணும்,என்ன மத்த ரெண்டு பேர திடுதிப்புன்னு இப்ப நிறுத்து னேன்னு வையி,எனக்கு அடுத்து ஆளு கிடைக்கிற வரைக்கும் கடைய நடத்துறது கஷ்டமாகிப்போகும்.

அதுலயும் கிடைக்கிற ஆளு நல்ல ஆளா கெடைச்சாத்தான் போச்சி ,இல்ல எங்க பாடு திண்டாட்டம்தான்.அதான் அப்பிடியே இழுத்துக்கிட்டும் தாக்காட்டி வைச்சிக்கிட்டுமா இருக்கோம். அது அப்பிடித்தான் இருக்கும் பத்துப்பேரு இருக்குற யெடத்துல இது போல ஒழப்பல் எல்லாம் இருக்கும்தான்,நீ அதெல் லாம் ஒண்ணும் கண்டுக்காத,நீ வாட்டுக்கு ஓன் வேலை உண்டு நீ உண்டு ன்னு இரு ,ரொம்ப முத்தி ஒன்னைய பாதிக்கிறது மாதிரி வந்துச்சின்னா ரெண்டு பேரையும் கூப்புட்டு சத்தம் போட்டு வைச்சமுன்னா சரியா போகும்,” என்றதும் அரை மனதினாய் ஏற்றுக்கொண்டு கடைக்கு வந்து போய்க் கொண் டிருக்கிறார்,

’காலையில எட்டு மணிக்கும் ஏழரை மணிக்கும் லேட்டா ப் போற வாக்கிங்க அந்தசெவத்தக்கண்டக்டரப்பாத்துதான்தெரிஞ்சிக்கிட்டேன்,அவர மாதிரிக் கூட போகலாம்,வாக்குங்குக்கு, ஆனா என்ன ஆனாலும் எட்டரை மணிக்கு பஸ்ஸ எட்டிப்புடிச்சி ஆகணும், அததான் அத விட்டாச்சி,கூழு,மீசை ஏதாவது ஒண்ணு தான ,,,,ஆனா மீசையும் வச்சிக்கிட்டு கூழையும் குடிக்கிற பக்கத்தக் கொண்டு வரணும் கூடிய சீக்கிரம்.அதை கொண்டு வர்றது மட்டுமில்ல ,அத விடாம கடைபிடிச்சிட்டேன்னுவையி,கொஞ்சம் பழக்கத்துக்கு உள்ளாயிரு வேன்,  எனச் சொன்ன போது சிரித்தாள் மனைவி.

”ஆமாம் பஜாருக்குப் போகணுந்தான்,அவசியம்,காலையில ஆபீஸீக்குப்போக சாய்ங்காலம் ஆனா வீடு வரவே நேரம் சரியா இருக்கு,யெடையில எங்கயும் போக முடியல,தவிர நான் பஸ்ஸீல போறதும் வர்றதும் நம்ம குடியிருக்குற ஏரியா வழியாத்தாங்குறதால பஜாருக்குப்போக வாய்யிப்பில்லாம போச்சி, ஏதோ ஒரு படத்துல சொன்னது மாதிரி நான் அந்தப்பக்கம் போகாததுனால டீக்கடை பாய் என்ன சார் ஆளையே காணம் ,நீங்கஇந்தப்பக்கம் வராததுனால நித்தம்ஒங்களுக்காக குடுக்க வச்சிருக்குற வடையும் டீயும் அப்பிடியே இருக்கு சார், வச்சிப்பாத்திருந்த வடைபூஞ்சனம் பூத்துப்போச்சி,ஆத்தி வச்சிரு ந்த டீ ஆடை மூடிப்போச்சி, நீங்க வந்த நாள்கள்ல டீகொஞ்சம் நல்லா போட்டுருக்கலாம்,வடையில உப்பு கொஞ்சம் ஜாஸ்தின்னு சொல்லுவீங்க, எங்க மனசு புண்படாமயும்,நாங்க ஏத்துக்கிற மாதிரியுமா,,,,/

‘நாங்களும் நீங்க சொல்றத தப்பா நெனைக்காம அப்பிடியேஏத்துக்கிட்டு சரி பண்ணிக்கிறுவோம். ஏன்னா நீங்க ஒங்க அதிகாரத்த காண்பிக்கிறதுக்காக பேசுற பேச்சில்ல அது, எங்க மேல இருக்குற அக்கறையிலசொல்ற விஷயமா அதப் புரிஞ்சிக்கிருவோம்,இப்ப அதெல்லாம் இல்லாம ஒரு வடையும் ,டீயும் எங்களுக்கு நஷ்டம்ங்குறாரு,அவர தாண்டிப்போனா புத்தகம் விக்கிற ”அம்மா கடை”க்காரருநீங்க வராம வாராவாரம் ஒங்ககிட்ட விக்கிற புத்தகம் அப்பிடியே கெடக்கு சார்,நீங்க அந்தப்புத்தகத்த வாங்காததுனால புத்தகத்துக்குள்ள இருக்குற எழுத்துக்களும் படைப்புகளும் படிக்காம அப்பிடியே கெடக்கு சார்”, என்பார்,

”வாஸ்தவம்தானே சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது போலத்தானே இதுவும்”.பதிலுக்கு சிரித்து விட்டு வந்து விடுகிறான் இப்பொ ழுதைக்கு இப்பொழுது அப்பக்கம் செல்கிற தினங்களில்/

”ஆமாம் போன ஞாயித்துக்கெழமையும் போகல, இந்த ஞாயித்துக்கெழமை யும் இப்பிடியே விட்டுட்டா எப்பிடி,,,,,,?வா அப்பிடியே போயிட்டு வருவோம், கெளம்பு, சீக்கிரம், நாம வர்ற வரைக்கும் புள்ளைங்க வீட்டப் பாத்துக்கிறட்டும் என்றவனாய் துண்டெடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கிக் கிளம்பினான்,

“எந்திரிக்கக் கொஞ்சம் லேட்டாகிருச்சி ,நீயாவது எழுப்பி விட்டுருக்கக் கூடா தா,,,? என்றவனை ஏறிட்டவள் எங்கிட்டு சீக்கிரம் எழுப்ப”,,,,ஒரு நாளைக்கு ரெண்டு மணிக்கு படுக்குறீங்க,ஒரு நாளைக்கு நாலு மணியாகுங்குறீங்க கேட்டா தூக்கம் வரலைன்றீங்க,மொதல்ல பதினோரு மணி பணிரெண்டு மணியா தாமதமாகிப்போயி நின்ன தூக்கம் இப்ப ரெண்டு மணி மூணு மணி நாலு மணின்னு நீளுது,கேட்டா தூக்கம் வரலைன்றீங்க,அதுலயும் சனி ஞாயிறு லீவுன்னா போதும் மொத நா ராத்திரி சிவ ராத்திரிதான் ஒங்களுக்கு, டீக் கடைக்காரரு கேக்குறா, என்னக்கா ஒங்க வீட்டுக்காரரு ராத்திரி பூராம் தூங்காம அப்பிடி என்னதான் செய்வாருன்னு,என்னதான் இருக்கட்டும், அதுக் காக விடிய விடிய முளிச்சிட்டு விடிஞ்தும் அப்பிடியே டீக்கடைக்கு விடியக் காலை நாலு மணிக்கு வந்து நிக்கிறாருக்கான்னு/

”என்ன வரலையோ என்ன யெழவோ,ஒரு மனுசன் இப்பிடியெல்லாமா முளிச் சிக்கிட்டு இருக்கக்கண்டம்,கேட்டா அதுக்கு ஆயிரம் காரணம் ,ஆயிரம் சாக்கு, என்ன சாக்கோ,என்ன காரணமோ,,,,,,,?

”சமையலறைக்குள் இருந்தாள்,கேஸ்டவ்வும் பண்டமும் பாத்திரமும் மிக்ஸி யும் கிரைண்டரும் குக்கரும் மட்டுமே அவளது உலகமாய் வரையறை பட்டுத் தெரிகிறது.காலைடிபன்,மதியம்சாப்பாடு இரவு டிபன் அல்லது அதே சாப்பாடு,,, என்கிற சட்டகத்துக்குள் அடை பட்டுப் போன அவளது வாழ்க்கை,

”சரி இப்பிடி என்னைய சீக்கிரம் கெளம்புன்னு சொல்லீட்டு நீங்க பாத்ரூமுக் குள்ள போயிட்டீங்கின்னா எப்பக்குளிச்சிட்டு வந்து கெளம்பி எப்ப போறது, இன்னும் நீங்க கறிக்கடைக்கு வேற போகணுமுன்னுவீங்க,ஒரு வாரம் கேப்பு விடுங்கன்னாக் கூட கேக்க மாட்டேங்கிறீங்க,என்னமோ கறியிலயிருந்து நேரடியா அப்பிடியே சத்து ஒடம்புக்குள்ள புகுந்துக்குறது போல இல்ல பேசுவீங்க, எதுக்கு வம்புன்னு நானும் சொல்றத கொறச்சிக்கிட்டேன்,“எடுத்துக் கொண்டாந்து குடுக்குறத ஆக்கிப்போடுறதோட நிறுத்திக்கிறேன் அவ்வளவு தான்,” என்ற மனைவியைபார்த்து புன் முறுவலித்தவனாய் இல்லல்ல குளிச்சிட்டு வந்ததும் போயி கறி எடுத்துட்டு வந்துர்றேன்,நீ அந்த கேப்புல கெளம்பீற மாட்ட, என்றவனை ஏறிட்டவள் இன்னைக்கி மட்டன் எடுக்க வேணாம் சிக்கன் எடுங்க,பெரியவ அதுதான் கேட்டா போன வாரம் மட்டன் எடுத்ததுக்கே மொனங்குனா, அவளுக்கு கொஞ்சம் பல்லுக்கு மெதுவா இருக்கணுமுன்னு நெனைக்கிறா,நீங்க குளிச்சிட்டு வாங்க நானும் அதுக்குள்ள கெளம்பீருவேன், ரெண்டு பேருமா பஜாருக்குப்போயிட்டு வரும் போது சிக்கன் எடுத்துட்டு வருவோம்,சிக்கன்தான,சீக்கிரம் சமைச்சிறலாம்,ஒரு மணி நேரத்துக்குள்ள வேலைமுடிஞ்சிரும்,என்றவளை சரி சீக்கிரம் கெளம்பு ,போயிட்டு வருவோம், காலாகாலத்துல என்றான்.போறதெல்லாம் சரிதான் நானும் ஒரு ரெண்டு வாரம சொல்லிக்கிட்டு இருக்கேன் நெலக்கடலை வாங்கணுமின்னு, நீங்களும் வாங்குன பாட்டக்காணோம், நானும் ஒங்களுக்கு அவிச்சிக்குடுத்த பாட்டக் காணோம் என்றாள்.

சரி வாங்கீருவோம் இன்னைக்கி என்றவனாய் பஜாருக்குகிளம்ப ஆயத்தமா னான்.

வாசலில் மண் கீறி நட்டிருந்த பூச்செடியில் மொட்டு விட்டிருந்த பூ மலர்ந்து சிரித்தது,

சனி, 26 அக்டோபர், 2019

நகர்வுகளினூடாய்,,,

பட்டாசு வெடிக்கிறது.
தூரத்து புறாக்கள் கைகோர்த்துப்பறக்கின்றன.
பட்டாசு சப்தம் அடங்கி விடுகிறது.
புறாக்கள் திரும்பவுமாய் வந்து அமர்கின்றன
அதே இடம் தேடி!

திரும்பவும் வெடி சப்தம்.
திரும்பவும் பறக்கிற புறாக்கள்!


நின்று போன வெடி சப்தம் திரும்பவுமாய்
திரும்பவுமாய் இடம் தேடி புறாக்கள்.
சப்தம் காட்டி வெடித்தது வெடியாகவும் 

கைகோர்த்து அமர்ந்தது புறாகவும் காட்சிப்படுகிறது 
அவ்விடத்தில்,,,,/


                                   ______________________


பேசிக்கொண்டேயிருக்கிறார்
எதிரில் இருக்கும் நண்பர்.
பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டுமாய் இருக்கிறேன்
நானும் இன்னவர்களுமாய்!

எதிரிலிருந்த மேஜையின்
உட்புறதளத்திலிந்த தீப்பெட்டியும்
அதன் உள்ளடக்கமும்
என் மனம் பற்றிக்கொள்வதாக!


தீப்பெட்டியை கையெலெடுத்துப்பார்த்த நான்

அதிலிருந்த குச்சிகளை எடுப்பதும்
பின் அதை பெட்டிக்குள்
வைப்பதுமாய் இருக்கிறேன்!


நான் மற்றும் இன்னவர்கள்
நண்பரின் பேச்சு ,திறவு கொண்டிருந்த
அறையின் சுகந்தம் என எல்லாமுமாய்
உருக்கொண்ட இடத்தில்
தீக்குச்சி ஒன்று என்
முன் உரசிச்செல்வதாக!

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சப்தங்களின் நகர்வுகளில்,,,,

”என்னகீரைக்காரம்மாநல்லாயிருக்கீங்களா”என்பதேஅன்றாடங்களில்அவரைப் பார்க்கநேர்கிறபொழுதெல்லாம்சபாபதியினுள்சுழியிடுகிறமுதல் கேள்வியாய் இருக்கிறது.

சபாபதியின்உலகம் மிகவும்சிறியது,ஓட்டை போட்ட கையடக்க தீப்பெட்டி யினுள் கருவேலை இலைகளுடன் குடிகொண்டிருக்கிற பொண்வண்டின் லாவகம் பட்டுத் தெரிவதான வாழ்க்கை/

பத்து டூ ஐந்தின் அலுவலகத்தனமும்,லோனில் கட்டிய வீடும் காலை எழுந்து ஒன்பதுமணிக்குள்ளாய் சாப்பாடு நிறைந்த டிபன் பாக்ஸீடன் பஸ்ஸை பிடிக்க விரைகிறதுமான அவசர வாழ்க்கை,

குடும்பம்,பிள்ளைவளர்ப்புஅவர்களதுபடிப்புமாதச்சம்பளம்,பலசரக்கு, மளிகை, தவணைப்பாக்கி வார இறுதி நாளில் சிக்கன் அல்லது மட்டன் செவ்வாய் வெள்ளி கோயில் என்பதே வீட்டில் பிரேமிட்டு மாட்டப்படாத விதி,

அதை சிறியதாக நீங்கள் எடுத்துக்கொண்டாலும் சரி அல்லது கொஞ்சம் விரிவாக்கம் செய்து பார்த்தாலும் சரி,

அவன் வேலை பார்க்கிற அலுவலகத்தில் மத்தாயூ அண்ணன் தொழிற்சங்க ஈடுபாடு கொண்டவராய் இருந்தார், தொழிற்சங்கம் ,தொழிற் சங்கம்,தொழிற் சங்கம் என்பதுவே அவரது பெரும்பான்மை நேரத்தின் பேச்சாய் இருந்தது.

ஊழியர் நலன் ,அவர்களதுஉரிமை,அவர்கள் பணி,பணியிடப் பாதுகாப்பு, பெண் ஊழியர் உரிமை,அவர்களது நலன் என இன்னும் இன்னுமாய் பேசிக் கொண்டு ம் செயல் பட்டுகொண்டுமாய் இருப்பார்.

அதுவே அவரது வாழ்நாளின் கடப்பாடு என்பது போல் பட்டுத்தெரிவார்,

வெளிக்கலர் பேண்ட்டும்,அடர்கலர் சட்டையும் ,மெலிந்து சலித்த உருவமும் அவருக்கு பொருந்திதான் இருந்தது சபாபதி பார்த்தவரை/

ஆனால் சிகரெட் குடிப்பது மட்டும் அவரிலிருந்து அவருக்கே அந்நியப்பட்ட செயலாய்த் தெரிந்தது.

அவர்தான் தொழிற்சங்கத்தின் பிராஞ்ச் செகரெட்டரியாய் இருந்தார்,

கதிரேசன் அண்ணன் இலக்கியம் பற்றி தனது அன்றாடங்களில் பேசத் தவறிய தில்லை,வேலை நேரத்தில் எதுவும் பேசுவதில்லை,மூச்சு விடுகிறாரா இல் லையா என்பதுவே சந்தேகமாகிப்போகிற அளவிற்கு இருப்பவர் மதியம் சாப் பிட உட்கார்ந்து விட்டாரானால் சாப்பாட்டை சாப்புடுகிறாரே இல்லையோ கண்டிப்பாய்வம்பு பண்ணியாவது அந்த சாப்பாட்டு மேஜையில் ஒரு கதையை கொட்டு விடுவார்,தேவையானவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் என./

கதை பேசுவதும் அதை படிப்பதும் பகிர்ந்து கொள்வதும் அவரது உள்ளுணர் வின் நகர்வாய் இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் அதுவே அவரை நகர்த்திக்கொண்டு செல்கிற உந்து சக்தியாய் இருக்கும்,

லலிதா அக்கா மறந்தும் கூட சினிமா பற்றி பேசாமல் இருந்ததில்லை, சினி மாவை பொழுது போக்கு எனச்சொல்வதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை, ”ஜஸ்ட் லைக தட் பொழுது போகலை அதுனால சினிமாவுக்கு போறோம், வந்துடுறோம், அவ்வளவுதான் என்பவர்களிடம் அவர் கடுமையாக தர்க்கிப் பார்,

”சரி நீங்க என்னைக்காவது ”ஜஸ்ட் லைக் தட்டாவோ”இல்ல பொழுது போக்கா வோகோயிலுக்குப்போயிருக்கீங்களா,இல்லை,அப்பிடி போறது பத்தி நெனைச் சாவது பாத்துருக்கீங்களா ,ஏன் அப்பிடி,,,,?

ஏன்னா கோயில் ஒரு புனிதஸ்தலம், அங்கயிருக்குற சாமி நம்ம வாழ்க்கைய காக்குறவர், நமக்கு வரம் கொடுக்குறவர் நம்மவாழ்க்கைய மகோன்னதமா ஆக்குறவர்,,,,ங்குற இன்னும் இன்னுமான நம்பிக்கையோடவும் அந்த நம்பிக் கைக்குஎந்த பங்கமும்சின்ன கீறலும்விழுந்துறக்கூடாங்குறகவனத்தோடயும் பய பக்தியோடயும்தான போறம்,

”ஆனா நம்ம வாழுற வாழ்கையோட கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற சினிமா வை,  நாம ஏன் ஜஸ்ட் லைக்தட்டா எடுத்துக்கணும்,?

”சினிமாவுலசொல்லப்படாத ,எடுத்து கையாளப்படாத,காண்பிக்கப்படாத விஷ யம் ஏதாவது இருக்கா சொல்லுங்க,,,?”

”ஆனா அத நாம ஜஸ்ட் லைக் தட்ன்னு ஒதுக்கி வைச்சிறோம்,”

”கலாச்சாரம்நம்மமுகம்மாதிரிஇல்லையா,முகம்இல்லாமஅலைஞ்சாநல்லாவா இருக்கும்,,,,?”என்கிற கேள்வியுடன் முடிப்பாள்.

அவளது அந்த முடிப்பில் தவறு இருப்பதாய் அந்த நேரத்திற்கு சொல்லி விட முடியாது.

இப்படியாய்பொழுதெல்லாம் சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்இலக்கியம் பற்றியுமாய் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு குடும்பம் என ஒன்று இருக்கா தா?அது பற்றி அக்கறை கிடையாதா அவர்களுக்கு,,,?அது பற்றி பேச்சே எடுக்க மாட்டேன் என்கிறார்களே என்கிற கேள்வியை இவன் மனம் கொண்ட ஒரு நாளில் ”எல்லாத்தோட எல்லாத்தையும் சேதாரமில்லாம இழுத்துட்டுப் போற ரசவாத வித்தைய அவுங்க கத்து வச்சிருக்காங்க,நமக்கு அது கைவரலைன்னு வச்சிக்கவேன்,,,” என்றார் அருகாமை சீட்டுக்காரர்.

தனது அன்றாடங்களில் தன்னை கடந்து செல்கிற அனைத்திற்குள்ளுமாய் எதிலும் பட்டுக்கொள்வத்தில்லை சபாபதி.

வீடு பிள்ளைகள் மனைவி டிபன் பாக்ஸ் சாப்பாடு,ஒன்பது மணி பஸ் ஒரு மணி நேர பிரயாண தூரத்தில் அலுவலகம் அங்கு தலை நிறைந்த வேலை,,, அது முடிந்து திரும்பவுமாய் வீடு, டீ,வி மெகாத்தொடர் சாப்பாடு தூக்கம் என்பதாய் உருக்கொண்ட வாழ்க்கையை வார்த்துக்கொண்டவன் தன்னியல்பா கவே அப்படியே இருக்க பழகிக்கொண்டான்.

முந்தா நாள் வீட்டில் செப்டிக் டேங்க் கிளீன் பண்ண வண்டி கூப்பிட மிகவும் சிரமப்பட்டுப் போனான்,

செல்லில் போய் கூகுளில் சர்ச் செய்து பார்த்தான்,கிடைக்கவில்லை,”இவ்வ ளவு பெரிய ஊரில் இதற்கென ஆட்கள் இல்லையா என தெரு ஓரம் ரோட் டோரம் யாராவது வண்டியுடன் நிற்கிறார்களா பார்ப்போம்” என இரு சக்கர வாகனமெடுத்து தேடிய பொழுது கிடைக்காமல் சுற்றிய அலுப்புப்போக ஒரு டீக்கடையோரம் வண்டியை ஓரம் கட்டி விட்டுநின்ற பொழுதுஆச்சரியப்பட்ட டீக்கடைக்காரர் சபாபதியிடம் ”என்ன சார் ,டீக்கடை பக்கமே எட்டிக்கூட பாக்க மாட்டீங்க,ஆனா இன்னைக்கி கடைப்பக்கம் வந்திருக்கீங்க,என்ன சார் எதுனா விஷேசமா என்றவாறே டீக்கிளாஸை நீட்டியவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைசொன்னபொழுதுஅட இதுதானா?இதுக்குப்போய்தானாஇவ்வளவு அலைச்சல்அலைஞ்சிக்கிட்டுவந்துருக்கீங்க,இந்த வெயில்ல,நீங்க வண்டியில போகும்போதுபாத்தேன்,அப்பயே ஒரு வார்த்தைசொல்லீருந்தீங்கன்னா நானே சொல்லீருப்பேனே என விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்,

”கார்ட்ல இருக்குற நம்பருக்கு போன் பண்ணீட்டு நான் சொன்னேன்னு சொல் லுங்க,பணம் கொஞ்சம் கொறைச்சி வாங்கிக்கிருவான்,தெரிஞ்ச பையந்தான்/

இது போல எதுனா வேணுமுன்னா சொல்லுங்க சார்,எங்களால முடிஞ்சா செஞ்சி குடுக்கப் போறோம்,இல்லைன்னா அதுக்கான வழிய காண்பிக்கப் போ றோம் அவ்வளவுதான”என டீக்கடைக்காரர் சொன்ன வார்த்தையின் கடைசிப் புள்ளியுடன்தீப்பெட்டிப்பொண்வண்டாய்அடைகொண்டசபாபதியின்அன்றாடங் களில் கீரைக்காரம்மா அவன் பஸ்ஸீற்கு செல்கிற காலை வேளையாய் குறுக் கிடுகிறார்.

கீரைக்காரம்மாவை பார்க்க நேர்கிற பொழுதெல்லாம் சபாபதிக்கு அம்மாவின் ஞாபகம் வருவது தவிர்க்க இயலவில்லை.

இன்னும்கொஞ்சம்சரியாக வைத்துப்பார்ந்திந்திருக்கலாம் என்றும் அவர்களது அந்திம காலத்தில் அவர்களை சரியாக பார்த்துக்கொள்ளாமல் விட்டு விட்டோ மோ என்கிற மன நடுக்கம் அவ்வப்பொழுது முள்ளாய்தைத்துக்கிழிக்கும்தான், அதிலும் கீரைக்காரம்மாவை பார்க்கிற பொழுது இன்னும் கொஞ்சம் அதிக மாகவே கிழிபடுவதுண்டு மனது.

”நல்லாயிருக்கேன்தம்பி,நீங்களும்என்னையப்பாக்குறபோதெல்லாம்கேக்குறீங்க, நானும் நல்லாயிருக்கேன்னுதான் சொல்லிக்கிறேன், ஆனா உண்மையில் நல்லாயிருக்கேனா இல்லையாங்குறது தெரியாட்டிகூட ஒங்க வார்த்தைக கொஞ்சம் தெம்பா இருக்குது தம்பி” என்பார்.

”நான் யேவாரத்துக்கு வந்த இத்தனை வருஷங்கள்ல இது நா வரைக்கும் என்னையப்பாத்து யாரும் இப்பிடி கேட்டதில்லை தம்பி,

”இப்பிடியெல்லாம் கேக்குறதுக்கு ஒரு தனிமனசு வேணும் தம்பி,

”இது வெறுமனே நலம் விசாரிகிற சொல் மட்டும் இல்லை தம்பி,கொஞ்சம் உள்ளின் உள்ளுக்குள்ள போயிப்பாத்தா ஒரு கல்மிஷமில்லாத மனசாலதான் இப்பிடியெல்லாம் கேக்க முடியும் தம்பி,

”ஏந்தம்பியும்இதேபோலத்தான்,அப்பிடியேஒங்கவாய்தான்,ஆனாஅவன்ஒங்கள்லயும் ஒரு படி மேல போயிருவான்,”

”கொஞ்சம் தெரிஞ்சவுஞ்கன்னா போதும் ,என்ன எப்பிடியிருக்கீங்க,வீட்ல அக்கா புள்ளகுட்டிங்கள்லாம் சொகமா,புள்ளைங்க படிப்பு எப்பிடியிருக்கு, இங்கி லீஸ் மீடியத்துல படிச்ச புள்ளைக்கு சரியா படிப்பு வரலைன்னு தமிழ் மீடியத் துல சேக்கணுமின்னீங்களே சேத்தாச்சா,மூத்த பொண்ணடெலிவரிக்கு கூட்டிக்கிட்டுவந்துருந்தீங்களே,கொழந்தபொறந்துருச்சா,நார்மலா,சிஷேரியனா, ஏன்னா இப்பயெல்லாம்சிஷேரியந்தான வழக்கமாகிப்போச்சி,நேரம் குறிச்சி இந்த நேரந் தான்புள்ளவேணுமுன்னு சொன்னா வேறென்னதான்செய்வாங்க அவுங்களும் .,,,, ங்குறது வரை போயிடுவான்,அது போலதான் தம்பி ஒங்க பேச்சும் இருக்கு,அது வரைக்கும் கொஞ்சம் ஆறுதல் தம்பி.

”இது நா வரைக்கும் இந்த ஏரியாவுல ஏங்கிட்ட பல பேரு பேசிருக்காங்க, அவுங்கெல்லாம் ஊரு பேரு ,சொந்தம் ஜாதி ஜனம் எல்லாம் கேப்பாங்க,ஆனா அதுல ஒண்ணுலகூடஎன்னையப்பத்துன அக்கறையான கேள்வியோ விசாரிப் போ இருக்காது தம்பி,

“எல்லாம் அவுங்களுக்கு வேண்டிய தகவலோ இல்லை நான் என்ன ஜாதி ஆளு,ஏங்குடும்பப்பிண்ணனி என்ன,,,இன்னும் இன்னுமானது பத்தியெல்லாம் தெரிஞ்சிக்கிறது தவிர்த்து வேறெண்ணும் பெரிசா இருக்காது தம்பி.

“நானும் இவுங்க இதுக்காகத்தான் கேக்குறாங்குறது தெரியாதது மாதிரி அப்பு ராணியா அவுங்களுக்கு ஏத்த மாதிரி பேசீட்டு வந்துருவேன் சமாளிச்சி/ என்ன அப்பிடிச்சொல்லும் போது அவுங்க உள்ளொ ண்ணு வச்சி புறமொண்ணு கேக்குற மாதிரி நானும் அவுங்க போக்குலயே போயி பேச வேண்டியதாத் தான் போகும்,சூழ்நிலைதான தம்பி எதையும் தீர்மானுக்குதுன்னு சொல்லு வாங்க,

”கீரைப்பாத்தி போட குத்தைகைக்கு நெலம் கொடுத்தவரு திடீர்ன்னு போன வாரம் வந்து நெலம் வேணும் எனக்கு,நாளையில இருந்து வெளியேறிக்க, நாளைக்கிநீ அறுக்குற கீரைகடைசிக்கீரையாஇருக்கட்டும்முன்னு படக்குன்னு போயிட்டாரு,

’அவரு சொன்னது போல மறு நா கீரையவும் அறுத்துட்டு அவர் வருவாரு ,ரெண்டு வார்த்த பேசலாமுன்னு நிக்கிறேன் ,டவுன் பஸ்ஸீ வர்ற வரைக்கும் அவரக் காணம், என்ன செய்ய பின்ன பஸ்ஸீ வரவும் ஏறி யேவாரத்துக்கு வந்துட்டேன்,

“அந்த பஸ்ஸ விட்டா அடுத்து ஒரு மணி நேரத்துக்கு பஸ்ஸீ கெடையாது. ஒரு மணி கழிச்சி வர்ற பஸ்ஸீல போனாஏங் யேவாரம் வம்பாப் போயிரும், அதுக்காகத்தான்அவரசாய்ங்காலம் வந்து பாத்துக்கிருவோமுன்னு நெனைச்சி வண்டி ஏறி வந்துட்டேன்,

”அதுஅவருக்கு மனசுவாதிச்சிருச்சி,என்னா ஒரு பொம்பள நான் வருவேன்னு மதி இல்லாம இப்பிடிபொறப்புட்டுப் போயிட்டாளே கொஞ்சமாவது கூறுவாரு வேணாம்பொட்டச்சிறுக்கிக்குன்னுகூடவந்தவர்ட்டவருத்தப்பட்டவர்நாளைக்கு ஒழவுக்கு மேல வீட்டுக்காரங்கிட்ட டிராக்டருக்குச்சொல்லீரு, அப்பிடியே கூலிக்குஆள்களும்சொல்லீரு,கீரைபோட்டுருக்கிறபாத்திகளதாண்டிஅங்கிட்டு கொணத்து மேட்டுப் பக்கமா கரடு தட்டிப் போயி பொதரா கெடக் குறத வெட்டி சுத்தம் பண்ணச்சொல்லீட்டு மொத்தமா உழுது போட்டமுன்னா என்னத்தை யாவதுரெண்டுதானியம்தவசியை வெதச்சி விடலாம்,இப்பிடியே போட்டுருந்த முன்னாநெலம் வீணாப்போகும்ன்னவரு அந்த பொம்பள வந்தா ஏங் வீட்டுக்கு வரச்சொல்லுன்னு சொல்லீட்டு போயிட்டாராம்”

”நான் யேவாரம்முடிஞ்சி அப்பத்தான் வீட்ல போயிநிக்கிறேன் இன்னும் சாப்பாடு கூடச்சாப்புடல,பச்சத்தண்ணிபல்லுலபடல,வந்துட்டாங்க,தூதுசொல்லி என்ன செய்ய பின்ன,கீரைக்கூடைய யெறக்கி வச்சிட்டு அப்பிடியே போறேன் அவரு வீட்டுக்கு,

”அவரு கறாரா சேர்ல கால் மேல கால் போட்டு ஒக்காந்துக்கிட்டு நாளைக்கி நீ நெலத்துல யெறங்கக்கூடாதுன்னாரு,

”ஐயா அதுபத்திப்பேசத்தான் காலையில கீரை அறுத்தப்பெறகு அவ்வளவு நேரம்காத்திருந்தேன்,வர்ரேன்னுசொன்ன நீங்க வர்ற வழியக்காணோம், வேற வழியில்ல,எனக்குகண்ணுக்குமுன்னாலகீரைக்கட்டும்காத்திருக்குறயேவாரமும் படமா விரிஞ்சி நிக்குது,என்ன செய்வேன் நானு.,கெளம்பீட்டேன், கீரைக் கட்ட தூக்கீட்டு,

“எனக்கு அன்னாட பொழப்புக்கும் சோத்துக்கும் அதுதான வழி, அத அடைச் சிட்டுதிடுதிப்புன்னு வந்து நெலத்த விட்டு வெளியேறுன்னு சொல்லுறீங்களே, எங்க போவேன் நானு,வேறபொழப்பு என்ன தெரியும் எனக்கு, நான் கீரைப் பாத்தி போட்டுருக்குறதால நெலம் வீணாப்போகுதுன்னு நெனைச்சிங்ன்னா, பாத்திபோடுருக்குறயெடத்தமட்டும்விட்டுட்டுமிச்சயெடத்துலநீங்கவிவசாயம் பாருங்க,அத விட்டுட்டு ஏங் பொழப்புல கை வக்கிறீங்களேன் னதும் ”ஏம்மா இன்னும் குத்தகை முடியாம ஓங்கிட்ட நெலம் கேக்குறது தப்புதான். ஏங் நெலத்த விட்டு ஒதுங்கிக்கிற கூடுதலா பணம் வேணுமுன்னா லும் தர்றேன், வெலகிக்க,இப்பிடியே கெடந்தா நெலம் பாலாப்போயிருமோன்னு நினைக்கத் தோனுதுமா அதான் குத்தகை முடியாம கேக்குறேன்,ஆம்பள தொணை இல்லாத வீடுன்னுதான் ஒனக்கு நெலம் குடுத்தேன், இத்தனைக்கும் ஓங்கிட்ட சொல்லித்தான் குடுத்தேன்,குத்தகை இத்தனை வருஷம் ,அதுக்கான பேப்பரு கையெழுத்து பத்திரமெல்லாம் சும்மா ஒரு தோதுக்குத்தான்,நான் எப்ப நெலம் வேணுமுன்னு கேக்குறேனோ அப்ப குடுத்துறனும்ன்னுதான குடுத்தேன்,இப்ப கேட்ட ஒடனே நெலத்தக்குடுக்க சொணக்கம் காட்டுறயேன்னு சொன்னவரு நாளைக்கி காலையில விடியக் கருகல்ல டிராக்டரோட வந்து நிக்கிறேன் நெலத்த உழுகுறதுக்குன்னு சொல்லீட்டு என்னைய அனுப்பீட்டாரு, அவரு சொன்ன சொல்லும் நெலத்த உழுக ட்ராக்டரும்மறுநாள்மட்டுமில்ல இன்னை க்கி வரைக்கும் நெலத்துப் பக்கம் வரவே இல்லை,

“நான் குத்தகைப்பணத்த மட்டும் கரெட்டாதேதி பிசகாம குடுத்துட்டு இருக் கேன் தம்பி, எப்பவாவது கீரைக் கூடையோட பஸ்ஸீ ஏற காத்துக்கிட்டு இருக் கும் போது அந்தப்பக்கமா போற நெலத்துக்காரரு ”என்ன கீரைக்காரம்மா நல்லாயிருக்கையான்னு” கேட்டுட்டுப் போவாரு,

”இப்பிடி விசால மனசு உள்ளவுங்க இருக்குற வரைக்கும் நலத்துக்கென்ன கொறைச்சல்லுன்னு நானும் ஓடிக்கிட்டு இருக்கேன் தம்பி,,,” எனச்சொன்ன கீரைக்காரம்மாவை எறிட்டான் சபாபதி/

கீரை,கீரை,கீரை,கீரை.,கீரை,கீரை,காற்றின்திசைகளெங்கும்கீரைக்காரம்மாவின்  சப்தம்/

சனி, 12 அக்டோபர், 2019

கடலைத்தோலு,,,


 சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனையாகவும், நன்றாகவும் இருக்கிறது.

”யப்பா நல்லாயிருக்குப்பா,வாசனை மட்டும் இல்லை,வாசனையை கொண்டு வந்தவளையும் பாராட்டனுந்தான் இந்நேரம்.”என்கிற இவனது பேச்சிற்கு செவி மடுத்துச் சிரித்தவள் சமையலறையை குலுக்கித்தான் போட்டாள் கொ ஞ்சமாக/

”ஏன் எதுக்கு இந்த அதிர் சிரிப்பு,என்ன சொல்லிப்புட்டேன் இப்ப,ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட வாசனையும்,அதை செய்வித்த ரசவாத வித்தைக்காரிக்கும் பாராட்டின்னுதானே சொன்னேன்,எப்பவும் சொல்ற வார்த்தைதான அது , அது க்குப் போயி இப்பிடி சமையலறை வெடிச்சிப்போற அளவுக்கு சிரிக்காட்டி என்னவாம்,”,?என்கிற இவனது கேள்வி சுமந்த பேச்சிற்கு,,,,,,,,

இன்னொரு அதிர் சிரிப்பை உதிர்த்து விட்டவள் அதன் நீட்சியாய் “இருக்கட்டு மே சிரிப்புத்தான என்ன கொறைஞ்சி போச்சி இப்ப,நீங்க என்ன கொறையா வா சிரிக்கிறீங்க,எதையும்உள்ளடக்கமாவச்சிபொறுமிக்கிட்டுஇருக்காம,சிறுமைத் தனம் காட்டிக்கிட்டு இருக்காம வெள்ளந்தியா வெறும் மனசோட நின்னா இந்த சிரிப்பு என்ன,எதுவேணுமுன்னாலும் வரும்,

”அதுவும் நம்ம மனசுக்குப்புடிச்சவுங்க நாலு நல்ல வார்த்தை பேசும் போது தன்னியல்பாவே பூரிச்சிப்போகுதான மனசு,அப்ப இந்த சிரிப்பு என்ன எல்லாம் சாத்தியமாகிப் போகுது நல்லபடியா” என்றவள் ”பொண்டாட்டி சமைச்சிப் போட்டசாப்பாட்டக்கூட பாரட்டத்தோணாம சும்மா வெறுமனே மண்ணு போல உக்காந்துட்டுசாப்புட்டுப்போறஆம்பளைங்கஎத்தனைபேருஇருக்குறாங்க, அவுங்களுக்கு மத்தியில ஒங்களப்போல ஒருத்தரு கெடச்சது நான் செஞ்ச பாக்கியந்தான” என்றாள்.

”வாஸ்தவம்தான் நீ சொல்லுறது,அதுக்காக நான் வாச்சது நீ செஞ்ச பாக்கியம் அதுஇதுன்னு கதை வுட்டுக்கிட்டும், பொய்யா நம்பிக்கிட்டும் இருக்காத ஆமா, எனக்கு மேலயெல்லாம் வீட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்பாத்துக்கிர்ற ஆம்ப ளைங்க இருக்காங்க,வீட்டு வேலைகள்ல கையையும் ,மனசையும் கலந்து விடுறதுல இருந்து அந்த வீட்டுக்கே பாரம் தாங்கியா நிப்பாங்க,,,/ நானு அதுல பாதி அல்லது கால்வாசின்னு வச்சிக்கவேன்/

பழுப்புக்கலரில்பூப்போட்ட டிசைன் போட்ட சேலை அவளுக்கு நன்றாகத்தான் இருந்தது,கண்ணுக்கு உறுத்தலாக மிகை காட்டியும் இல்லாமல்,டல்லாக அமுங்கிப்போய் இல்லாமலும் பூக்களுடன் சிரித்தது.

பூக்களின்ஊடாக நீளமாகவும் சற்றே சின்னதாயும் ஓடிய கோடுகள் இரண்டை உருவி எடுத்து அப்படியே பின்னி வளைத்து ஜடை போட்டு புடவைலிருந்து கழண்டுவிழுந்தபூவை எடுத்து பின்னல் வைத்த ஜடையில் சொருகி விடலாம் போலிருந்தது.

எட்டி மணியைப் பார்க்கிறான்.சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள் ளுடன் கைகோர்த்துக்கொண்டு ஆறாகப்போகிறேன் என்றவித்தது.

இரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கினான்,

”தாமதமுங்குறது சரி,அதுக்காக இவ்வளவு தாமதமா,காலையில ஆறுமணி வரைக்குமாதாமதத்தஇழுத்து நீட்டிக்கிறது.அப்பறம்ஒடம்புஅப்பிடிப் பண்ணுது இப்பிடிப் பண்ணுதுன்னுகத்திகூப்பாடு போட்டுக்கிட்டு ஆஸ்பத்திரி மருந்து மாத்திரன்னு அலைய வேண்டியது,

“இதுலசெலவு மட்டுமா,எவ்வளவு மன ஒளைச்சலு எவ்வளவு சங்கடம் எவ்வ ளவு மெனக்கெடலு,,”என்பவளை ஏறிடுகிறவன்”,சரிதான் நீசொல்றது, ஆனா நேரத்துக்கு எந்திரிச்சிநேரத்துக்குப்படுத்து நேரத்துக்குச்சாப்புட்டுங்குற நேர் கோடான விஷயத்துல இருந்து கொஞ்சம் வெலகி நிக்கத்தான் வேண்டி இருக்கு சமயங்கள்ல,,,,/

”சமயங்கள்ல இருந்த அது உருப்பெருகி கொஞ்சம்,கொஞ்சமா சமயா சமயங் கள்லன்னு ஆகிப் போச்சி. அன்னைக்கி உள்ளபடிக்கும் என்னாச்சின்னா நீங்க ளெல்லாம் படுத்து தூங்கீட்டீங்க,நான் கொஞ்ச நேரம் லேப்டாப்புல டைப் அடிச்சிக்கிட்டு இருந்தவன் அது முடிஞ்சதும் தூக்கம் வராம டீவிய போட் டேன், லோக்கல் சேனல்ல அடுத்தடுத்து ரெண்டு படம்,ரெண்டும் நல்ல படம். நல்ல படம் பாத்து நாளாச்சி.அப்பிடியே ஒக்காந்துட்டேன்.

“படம் பாக்க ஆரம்பிக்கும் போது மணி பணிரெண்டரை இருக்கும்,ரெண்டு படத்தையும் பாத்து முடிக்கும் போது அது ஆகிப்போச்சி அஞ்சரை மணி, சரின்னு எந்திரிச்சிப்போயி மொகத்தக்கழுவீட்டு வந்து படுத்து தூங்கும் போது மணி ஆறாகிப்போச்சி,அதுதான் விஷயமே தவிர்த்து வேறொன்னுமில்லை, ஆமா” என்றவனை எறிட்டவள் ”என்னமோ போங்க,பதினோரு மணி பண்ணெ ண்டு மணி ஒரு மணின்னு இருந்தது மாறி ஆறு மணிவரைக்கும் நீண்டிருக் குன்னாகொஞ்சம்ஆபத்துஇல்லையா,நீங்க என்ன இன்னும் எளந்தாரிப் புள்ளை யா,ஒங்களநம்பி குடும்பம் இருக்கு,புள்ளகுட்டிக நாங்க இருக்கம் பாத்துக்கங்க, என்றவளின் வார்த்தையில் தெரிந்தஅக்கறை அவ்விடம் பட்டுத் தெரித்ததாய்,,,/

வெந்து கொண்டிருக்கிறதா,இல்லை அவித்து அடுப்பிலிருந்து எடுத்தவுடன் வந்த வாசனையா,,,,?பிடிபடவில்லை,

நேற்றைக்கு முன் தினம் பஜார் போகும் போது வாங்கியது,வீட்டில் சுத்தமாக மளிகை இல்லை,வாங்க வேண்டும் என்றாள்,

மாதம் முதல் மூன்று தேதிக்குள்ளாய் போய் விட்டால் கொஞ்சம் கூட்டம் மத்துவமாய் இருக்கும் பலசரக்குக்கடைகளில்,

பலசரக்கு வாங்கிக்கொண்டு அப்படியே தவணைப்பணம் கொடுக்க வேண்டிய ஜவுளிக்கடைக்கும்பர்னிச்சர்மார்ட்டுக்கும்தவணைகட்டிவிட்டுவந்துவிட்டால்  வீட்டில் மற்ற செலவுகளை பிளான் பண்ண தோதாய் இருக்கும்.

மனைவியை கொண்டு போய் பலசரக்குக்கடையில் விட்டு விட்டு ஜவுளிக் கடைக்கும் பர்னிச்சர் மார்ட்டுக்கும் போய் விட்டான்.

போய் விட்டுத்திரும்புகையில் பஜார் முக்கில் தள்ளு வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் கடலை வியாபாரி,

எப்பொழுதும் விற்பவர்தான்,”கடலை கடலை, கடலை கடலை”,,என கட்டைக் குரலில் அவர் போடுகிற சப்தம் பஜாரின் மறு முனை வரை கேட்கும் மைக் இல்லாமலேயே/

அதிலும்இவன் அவரைக்கடந்து போவதைப்பார்த்ததும் சப்தம் கூட்டிவிடுவார். அவரை இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது, கடலை வாங்கப்போகும் போது ஏற்பட்ட பழக்கம்தான்,

அவர்களுக்கும் இவன் போன்றவர்களின் பழக்கம் தேவைப்படுகிறதுதான், கீரைக்காரம்மாவைப் போன்று/

அவரும் இவர் போல்தான்,இன்னொரு தெருவில் வரும் போது போதே இந்தத் தெருவில் இருக்கிற வீடுகள் கீரை வாங்க ரெடியாகி விடும்.

அன்றாடங்களில் அவர்கள் வியாபாரத்திற்காய் வருகிற நேரத்தை சரியாய் சொல்லிவிடமுடியாது,ஒரு நாளைக்கு காலை ஆறு,ஆறரை மணிக்கு வந்தா ரென்றால் மறு நாள் அல்லது எட்டு மணி மூன்றாம் நாளில் ஒன்பது மணி யாகிப் போகும்,

”வாங்கம்மா என்ன இந்நேரம் வர்றீங்க” என்பான் இவன் ஆபீஸ் கிளம்பி பஸ்ஸீற்காய் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருக்கிற பொழுது/

இல்லதம்பி நேரமாகிப் போச்சி,கரெக்டா நூல் புடிச்சாப்புலசரியானடயத்துக்கு வர்றதுக்கு இதென்ன ஆபீஸ் வேலையா தம்பி, இப்பிடித்தான் ஒரு தெருவுக் குள்ளபோனா கொஞ்சம் சீக்கிரம் வரலாம்,இன்னோரு தெருவுக்குள்ள போகும் போது அது போல ரெண்டு மடங்கு டயம் ஆகிப்போகுது,இதுல ஆகாத போகாத வுங்க பேசுற மோசமான பேரம்,பத்து ரூவா கீரக்கட்ட வாய் கூசாம அஞ்சி ரூவாயிக்கிக் கேப்பாங்க, இதேது பஜார் போயி வாங்குனாங்கன்னா அங்க இருபதுரூபாய்கேட்டாலும்குடுத்துட்டுத்தான்வருவாங்க,எப்பவுமேஎளியவுங்க கிட்டதான நம்ம சமூகம் அதிகாரம் பண்ணி பழகீருக்கு, குனிஞ்ச வன் மேல தான குதிரை ஏறப் பழகீட்டோம் நாமளும்,கொஞ்சம் நிமிந்து நிக்கிறவன் கிட்ட நம்ம அதிகாரம் செல்லாது இல்லையா,அதுமாதிரித்தான் ஆகிப்போகுது தம்பி,

“இன்னைக்கி ஒங்க தெருவுக்கு முந்துன தெருவுல பாத்தா ஒரு அம்மா கீரை வாங்குறோமுன்னு பேரம் பேசுறாங்க,பேசுறாங்க அவ்வளவு தூரத்துக்கு பேசு றாங்க, மூனு கட்டு வாங்கிர்றேன்,பதினைஞ்சி ரூவாக்கு தர முடியுமான்னு கேக்குறாங்க,எனக்குன்னா கோவமுன்னா கோவம்,சரியான கோவம்,ஏம்மா இப்பிடி பேசுறீங்க,நீங்க வியாபாரம் வாங்காட்டிக்கூட பரவாயில்லை, இப்பிடி யெல்லாம் அடிதண்டமா வெலைப் பேசாதீங்கம்மா,நீங்க இப்பிடி கேக்க ஆரம் பிச்சிங்கின்னா இனி நான் யேவாரதுக்கு போற தெருவுல எல்லாம் இப்படியே கேக்கஆரம்பிச்சிருவாங்க,ஏங்யேவாரம்கெட்டுப்போகும்மா,இப்பிடியெல்லாம் பேசாதீங்க,ஏங்கிட்ட மட்டும் இல்லை,என்னையப்போல தெருவுல வியாபாரம் பண்ணவர்றவுங்ககிட்டயார்கிட்டயும்இப்பிடியெல்லாம்பேசாதீங்கம்மான்னதும் அந்தம்மாவுக்கு கோபம் வந்துருச்சி,”ஏய் போடி அந்த மானிக்கி பெரியஇவ நீயின்னு கண்டமானிக்கி பேச ஆரம்பிச்சிட்டாங்க,நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்குறது,சரி வயசுல பெரியவுங்க,ஏதோ பேசுறாங்கன்னு விட்டுருவோமுன்னு நெனைச்சா ரொம்பத்தான் ஓவரா பேசுற மாதிரி தெரிஞ் சிச்சி எனக்கு.

”தவிரஅஞ்சி வருஷத்துக்கு மேல யேவாரம்பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்படி யாரும் பேசுனதில்லை.

”வயசுல பெரியவுங்க இப்பிடியெல்லாம் பேசாதீங்கம்மான்னு சொல்லிப் பாக்கு றேன், அந்தம்மா கேக்குற வழியக் காணோம்.ரொம்ப எல்லையில்லாம பேசுற மாதிரி தெரிஞ்சதும் நான் தெருவுல இருக்குற கல்ல எடுத்து ஓங்க ஆரம்பிச் சிட்டேன்,ஒடனே அந்தம்மா உள்ள போயிருச்சி,நாயே வெளியில வந்த ஒன்னைய கல்லால அடிச்சிக்கொன்னுருவேன்னு சத்தம் போட்டுட்டுத் தான் வந்தேன்.,

”தெருவே வேடிக்கை பாக்க அந்தம்மா அவமானப்பட்டுதான் வீட்டுக்குள்ள போச்சி,இனிமே அது என்னைக்கண்டா பத்தடி தள்ளித்தான் போகும்,

இப்பிடி பிரச்சனையெல்லாம் தாண்டி வரும்போது லேட்டாயிச்சிதான் கொஞ் சம்,என்றார்,

”சரிங்கம்மாஎன்ன செய்யிறது,இது போலஇருக்குறவுங்கலயெல்லாம் சகிச்சிக் கிட்டுதான் யேவாரம் பண்ண வேண்டியதிருக்கு எனக் கூறியவாறே ரெண்டு கட்டு குடுத்துட்டுப் போங்க எனச் சொன்னவனாய் மனைவியிடமும் கீரைக் காரம்மாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்,

மீதிக்கதையை கீரைக்காரம்மா இவனது மனைவியிடம் பேசியிருக்க வேண் டும் கண்டிப்பாக/ஏனென்றால் இவனது தெருதான் கீரைகாரம்மா கடைசியாக வரும் தெரு,

அதனால் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்து விட்டுப்போகலாம் என்கிற நினைப் பில் கீரைக்காரம்மா இருந்து பேசிவிட்டுப் போவார்கள்.

ஏன் இப்பிடி தள்ளாத காலத்துல வீதி வீதியா அலைஞ்சி வியாபாரம் பண்ணு றீங்க,சிவனேன்னு உள்ள வேலையப்பாத்துட்டு இருக்குறத சாப்புட்டுக்கிட்டு விட்டுல இருக்குறத விட்டுப்புட்டு எதுக்குப்போயி தட்டலைஞ்சிக்கிட்டு இருக் குறீங்குறீங்க,,,,,,என்கிற மனைவியின் பேச்சிற்கு எங்கம்மா நிம்மதியா ஒக்கா ந்து சாப்புடுறது, இத்துப்போன பொழப்புமா எங்க பொழப்பு,ஒருபக்கம் குடும்பம் ,ஒரு பக்கம் யேவாராம் ,ஒருபக்கம் ஒங்களப்போல இருக்குற வீட்டுக்காரங்க, இதுக்குயெடையிலகீரைபயிர்பண்ணியிருக்குறதோட்டத்துக்காரவுங்க,பஸ்ஸீ, கண்டக்டர்,டிரைவரு,லக்கேஜீன்னு இதுதான் சுத்துச்சுத்தி வருமே தவிர்த்து வேற ஒரு நெனைப்பும் வர்றதில்லம்மா,பொழப்ப நெனைக்கும் போது/

“எனக்கு இத விட்டா பொழப்பு ஏது தாயி,அதான் மேடான்னாலும் பள்ளமா னாலும் வந்துர்றது/ இருக்குறது இருக்கட்டும்,ஆகுறது ஆகட்டுமுன்னு..,,,,/என அன்றாடங்களை எடுத்து வைக்கிற கீரைக்காரம்மாவின் பேச்சு.

”என்ன கடலைக்காரண்ணே நல்லாயிருக்கீங்களா என்கிற பேச்சுடன்தான் பையை நீட்டினான் அவரிடம்.

”நல்லாயிருக்கேன் தம்பி,ஒங்களப்போல ஆட்க இருக்குற வரைக்கும் என்னை யப் போலானவுங்க நல்லா இருப்போம் தம்பி,அட மெய்யாலுமேதான் சொல் றேன் தம்பி,நீங்க ஏங்கிட்ட வாங்குற யேவாரத்த வச்சி மட்டும் சொல்லல, ஒங்க மனச வச்சி சொல்றேன்,கேள்விப்பட்டுருக்கேன் ஒங்களப்பத்தி,ஒங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் தம்பி,இந்த சின்ன வயசுல இந்த மனசு வாய்க்கிறது ரொம்பவே அபூர்வம் ,தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனுமுன்னு நெனைக்கிற வுங்க இருக்குற இந்தக்காலத்துல தனக்கு ஒரு சுகக்கேடு ஏற்பட்டாலும் பரவாயில்ல,அடுத்தவுங்க நல்லாயிருக்கணுமுன்னு நெனைக்கிற கொணம் ரொம்பவேஅபூர்வம்தம்பி.”என்றவரைஇடைமறித்து”போதும்போதும்என்னையப் பத்தி மட்டுமே பேசுனது,யேவாரம் எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க, மத்ததப் பத்தி அப்புறம் பேசலாம்,”

”என்ன தம்பீ யேவாரம் ,பெரிசா யேவாரம்,கௌரவதுக்காக பீ தின்ன பொழப்பு”

”என்னதான் புள்ளைங்க உக்கார வச்சி சோறு போடுறேன்னு சொன்னாலும் கூட ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் நம்ம கைய ஊனி நாமதான் கர்ணம் பாயணுமுன்னு நெனைச்சி தேனிப்பக்கம் இருந்து கடலை மூடை யெறக்கி வித்துக்கிட்டு இருக்கேன்,

“ஒரு நாளைக்கு அழிவு செலவு போக கையப்புடிக்காம ஏதோ கெடைக்கும், கெடைக்கிறது கைக்கும் வாய்க்கும் பத்தாது தான், புள்ளைங்க வீட்டுல சாப்பு ட்டுக்கிட்டு இருக்குறதுனால ஓடிக்கிருது வண்டி எனச்சொன்னவரை ஏறிட்டவ னாய் கடலை வாங்கிக் கொண்டு வந்தான்.

சமையலறையிலிருந்து வேர்க்கடலை அவிக்கும் வாசனை வருகிறது,நாசி நிறைந்த வாசனை. நன்றாக இருந்தது,

வாசனையின்வசம் இவனும் வாசனை கொண்டுவந்தவளின் பக்கம் இவனது மனமும்/