ஞாயிறு, 12 ஜனவரி, 2020

நீர் நாத்து,,,,,

கிளம்பும் போது காலை மணி பதினொன்று இருக்கலாம்.

பதினொன்று,,,என்பதுபத்துக்குப்பின்னால் வருவதுதானே என நீங்கள் கேட்பது புரிகிறதுதான்,

முன்னதில் வேர் விட்டு பின்னதில் படர்வு கொண்டு இலக்கை எட்டிப் பிடித்த தாய் காட்சி கொள்கிறது பதினொன்று,,,,,/

யாருடைய அனுமதியும் இல்லாமல் யாரையும் எட்டித்தொட்டுக்கேட்கா மல், யாருடைய முன்னிசைவும்இல்லாமல் தானாய் ஆகித்தெரிகிற பதினொன்று க்கு யாரின் முன் மொழிவும் தேவையாய் இருந்திருக்கவில்லைதான்இது நாள் வரை யிலுமாய்,/

”ரொம்ப எளிதான விஷயம்,என்ன கயிறு போட்டா ஏறி வரப்போற, பண்ணி ரெண்டு அடி தொங்குற கயித்துல பத்தடி ஏறுனதுக்கு அப்புறமா கொஞ்சம் களைப்பாறிக்கிட்டு பதினோறாவது அடி ஏறி வரணுங்குற கட்டாயம் ஏதும் இல்லாம நீ வாட்டுக்கு கடகடன்னு வந்துர வேண்டியது தான,,,, எனச்சொல்லி மௌனிக்கப்போகிறநேரமாய்சத்தமில்லாமல்பதினொன்றைகாட்டிவிடுகிறதுதான் மணிக்கூடு,

மண் கீறி துளிர்த்த தளிர் கிளை வைத்து நெடித்து வளர்ந்து நிலைகொள்கிற போது பூத்து வளர்கிற பூக்கள் ஒவ்வொரு இதழாய்அடுக்கிச்சேர்ப்பது போல ஒன்றிலிருந்து மெல்ல மெல்ல மேலேறி வந்து ஒன்றொன்றாய் கூட்டி வருகிற மணித் துளிகள் இப்படி பதினொன்றில் கால் பதித்து நிற்கிறது,

”கைவீசம்மாகைவீசு,கடைக்குப்போகலாம் கை வீசுமிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய்தின்னலாம்கைவீசு,,”என பாடல் இழையசிவாஜிகணேசன் நடித்த ”பாசமலர்” திரைபடத்தை நேற்று இரவு பார்த்த போது கண்களும் மன மும் நிறைந்து போனதுதான்/

ஆகா என்ன ஒரு நடிப்பு ,என்ன ஒரு நடிப்பு என திரும்பத்திரும்பவுமாய் வாயாரவும் மனதாரவும் பாரட்டிக்கொண்டே இருக்கத்தோணுகிறதுதான்.

அங்கமெல்லாம் நடிப்பை வைத்துத்தைத்துக் கொண்ட ஓரு மனிதரின் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் தகும்.

இரண்டுநேரத்திற்கும்குறையாமல்ஓடுகின்றஒட்டுமொத்ததிரைப்படத்தையும் தனது கம்பீர நடிப்பால் மட்டுமே தூக்கி நிறுத்திய அந்த நடிக மேதையும் உடன் நடித்த நடிகையர் திலகமும் இப்பொழுதும் கண் முன்னே நின்று கொண்டிருக் _கிறவர்களாக,,,/

உடம்பில்சட்டைகூடஇல்லாமல் எலும்புக்குள்குளிர் துளைக்கிறஇந்த மார்கழி மாதஇரவில் மேலில்போர்த்திய ஒற்றைதுண்டுடனும் இடுப்பில் கட்டிய லுங்கியுடனுமாய் திறந்த வாய் மூடாமல் மனம் இயைந்து இப்படியான தொரு படம் பார்த்து நீண்டநாட்களாகிப் போனது,

கண்களும் மனமுமாய் நிறைந்து அந்த குளிர் கால இரவில் யாருக்கும் தெரியா மல் அழுகிற திருப்தியை அந்தப்படம் தந்தது,,,,/

அதனாலேயே காலை எழ தாமதமாகிப்போனது,

பின்தூங்கிமுன்னெழுகிறபாக்கியத்தைசெல்போனும்தொலைக்காட்சிச்சேனல்க ளும்இண்டர்நெட்டும்தந்துவிட்டுபோயிருக்கிறதுதான்மனம்அகலாப்பரிசாய்,,,/

பரவாயில்லை,இதுவும்நன்றாகவேஇருக்கிறது,சில அன்பின் தொல்லைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சில விஷயங்கள் தருகிற நல்லனவற்றை சுவீகரித்துக்கொள்ளத்தான் வேண் டியதிருக்கிறது. சுவீகரித்துக்கொள்வோம்,

பஜாருக்குச்செல்லவேண்டும்காய்கறிகள்வாங்க,கத்திரிக்காய் வெண்டை க்காய், புடலங்காய் ,முட்டைக்கோஸ்,உருளைக்கிழங்கு உடன் நூறு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ,மல்லி இலை,,,/
 
மனைவிகூட சத்தம் போடுவாள்,இத விட்டா ஒங்களுக்கு வேற காய்கறியே கிடைக் காதா,இல்ல தெரியதா,ஏன் இப்பிடி சத்தியப்பிரமாணம் எடுத்த மாதிரி வாங்குன காய்கறியே வாங்கீட்டு வராட்டி வேற ஏதாவது ஒண்ணு புதுசா வாங்கீட்டு வரவேண்டியதுதான?என்ன காய் கறியா அத்துப்போச்சி மார்க்கெட் டுல , அப்பிடியே குதிரைக்கு சேனைகட்டுன மாதிரி பாத்துக்கிட்டுத் திரிஞ்சா அப்பிடித்தான்,

எங்கஎன்னஇருக்குதுண்ணுபாக்கணும்,என்னஇருக்குதுன்னுகேக்கணும்,என்ன இருக்குமுன்னு உணரனும்,,,நாலையும் சீர் தூக்கிப்பாத்தாத்தான தெரியும் உண்மை நெலமை,அதவிட்டுட்டு,,,,,,

அன்னைக்கிகடைக்கிப்போனப்பகடைக்காரர்கூடசொல்றாரு என்னம்மா ஒங்க வீட்டுக்காரருக்கு இத விட்டா வேற காய்கறி வாங்கத் தெரியாதான்னு, எனக்கு ன்னா ஒரே அவமானமா போச்சி,

ஊரெல்லாம் போயி அது இதுன்னு பேசிக்கிட்டு திரியிற மனுசனுக்கு ஒரு காய்கறிவாங்கீட்டுவரத்தெரியலையான்னா,,,இந்தக்கொடுமையஎங்ககொண்டு போயி அழுகுறதுன்னு தெரியலை,

என்னஇப்பரொம்பத்தான பொலம்பாத ,வாங்குனது வாங்கீட்டு வந்துட்டேன், வச்சிசமாளிப்பையா,அதவிட்டுஆயிரம்காலமானியம்ன்னுபேசிக்கிட்டு இருக்க எதுக்கு,,,,,,?

”ஆமா,,,,,எதுக்காமில்ல எதுக்கு,இத ஒண்ண கேட்டுக்கங்க ,நீங்க போயி நிக்கிற யெடம்தான் சரியானது,ஒங்க நடப்புதான் ஞாயம்,ஒங்க பேச்சு தான் பேச்சு, எதுத்து நாங்க ஒண்ணு சொல்லீறவோ பேசிறவோ கூடாது, ரொம்ப நாகரீகமா வும் காரிய சாத்தியமாவும் அத மறுத்துருவீங்க, அப்பிடித்தான் போயிக்கிட்டு இருக்குவாழ்க்கை.,”என்றவளை ஏறிட்டபோது ரொம்ப வீடுகள்ல இன்னைக்கி நெலம இப்படித்தான் இருக்கு, இதுல நான் வச்சதுதான் ,நான் வாங்குனதுதான் எல்லாமுன்னுசட்டம்பேசிக்கிட்டெல்லாம்திரியக்கூடாதுஇங்கஆமாம்சொல்லிப் புட்டேன்,, என்றவளை அருகிழைத்து தலை கோதிய போது ,,,,,,எதாவது ஒண்ணு பேசுனா இப்பிடி மனச நீவி விட்டுருங்க,,,,என அங்காலாய்த்தவளாய் சமையலைறைக்குள் சென்று விடுகிறாள்,

முன் சென்ற அவளின் பின்னே கேட்ட லேசான சிரிப்புச்சத்தம் கசிந்து வருவதாய்,,,,/
 
விசாலபட்டுத் தெரிகிறது வீடு.பிள்ளைகள் இல்லா வீடு அப்படியாய் காட்சிப் படுவதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான்.

பெரியவள் பொங்கல் விடுமுறைக்கு வருகிறேன் என போன் பண்ணியிருந்தா ள்.

என்னிடம் பேசும் போது அளவாகத்தான் பேசுகிறாள், எனது மனைவி யிடம் நீண்ட நேரம் பேசுவாள், பெண்பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி விட்டால் அம்மா வுடன் அதிக ஒட்டுதலாய் இருப்பார்கள் என்பது உண்மை தான் போலும்,

மனம் மற்றும் உடல் சார்ந்தவைகளை பகிர்ந்து கொள்ள தாயன்றி வேறு யார் சரியாக இருப்பார்கள்,

அதற்காக ஹாஸ்டல்,கல்லூரி ,படிப்புச்சுமை,,இது பற்றிக்கூடவா பகிர்ந்து கொள்ளக்கூடாது,,,,,? என மனைவியிடம் ஆதங்கப்பட்ட போது அப்பிடித் தான் பொம்பளப்புள்ளைங்க,,,,,தலைக்குமேலஒசந்த புள்ள ,இனி போயி ஒங்க கிட்ட சமமா ஒக்காந்து பேசுவான்னு எதிர்பாக்குறது தப்பு, இல்லையா,,,, என்றவள் பரவாயில்ல இவளாவது இந்தளவுக்கு பேசுறா,சொல்றா,,,, மத்த புள்ளைங்க மாதிரி இல்லாம,,,என்ற போது இவனுக்குக்கொஞ்சம் பெருமையா கவும் கொஞ்சம் நெஞ்சு நிமிர்வாகவும் இருந்தது,,,,

அதே வேளை நெருடலாய் மனதுக்குப்பட்டது கேட்டுவிட்டான் மனைவி யிடம்/

இவன் வாய் திறக்கும் போதே யூகித்தவளாய் நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது,

ஏன் நம்ம செய்யாததையா புள்ளைங்க செஞ்சிருச்சி,ஒங்களுக்கு ஒரு ஞாயம், அவுங்களுக்கு ஓரு ஞாயமா,நம்ம காலம் வேற இப்பக்காலம் வேற,அப்ப புள்ளைங்கள வீடு வளத்து ச்சி,இப்ப சூழல் வளக்குது,

வீட்டுக்குக்கட்டுப்பட்டு அப்பிடியெல்லாம் இருந்த நேரத்துலயும் கூட ஒங்களு க்கு என்னைய தர சம்மதிக்காத எங்கஅப்பாவை எதுத்துக்கிட்டு சேவல் கூவாத ஒரு விடியல்ல சைக்கிளோட முன் புறத்துல உக்கார வச்சி கூட்டிக்கிட்டு வந்து ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சி தாலிகட்டுனர்ல நீங்க,,,

ரிஜிஸ்ட்ரார் மாலை கொண்டு வரலையான்னு கேட்டப்ப இல்லன்னு சொன்ன கையோட முஷ்டி உயர்த்தி காண்பிச்சிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் வாசல்லயே உக்காந்து தாலிகட்டுனவரில்லையா நீங்க,,,,

ஒங்களுக்கு ஒரு ஞாயம் ,அவுங்களூக்கு ஒரு ஞாயமா, சொல்லுங்க,,,, அப்பிடி யெல்லாம் எனக்குத்தெரிஞ்சி ஒண்ணும் இல்லை,அப்பிடியே இருந்தாலும் ஏங் தடுக்கணும்,அது ஒண்ணூம் பெரிய தப்பு இல்லையே,

மலர்ந்து நிக்கிற பூவோட இதழ்கள ஏங் ஒவ்வொண்ணா பிச்சி கீழ போட ணும் ,விடுங்க மணம் வீசட்டும் பல பக்கமா எனச்சொன்னவளை ஏறிட்ட போது தெளிந்து ஓடிய நீராய் தெரிந்தாள் தீர்க்கம் கொண்டு,,,,/

இன்று எதிர் பார்த்த விடுமுறை கிடைக்கவில்லை ,ஆகவே வருகிறேன் நாளை என பேச்சை முடித்திருந்தாள் என்னிடம்,,/

சின்னவள்சொல்கிறாள்அவள்ட்ரெயினில் வந்து இறங்கமதியம்ஆகிப் போகும், நான்போயிகூட்டீக்கிட்டு வந்துர்றேன்அவளை,நீங்க அவளைப்பத்தின கவலை இல்லாமபோற வேலைக்கு போயிட்டு வாங்க என இருவரையும் வழியுனுப்பி வைத்தாள்,

பாக்கியசாலிகள் பெண்பிள்ளைபெற்றவர்கள் எனச் சொன்ன சிறு மூளையின் சொல்லை அடிபணிந்தும் கைகட்டியும் ஏற்றுக்கொண்டு சமையலைறை மேடையை எட்டிப் பார்க்கிறேன்,

வாய்அகன்றசில்வர்தட்டில்தோசைகள் இரண்டும்அருகிலிருந்த கிண்ணத்தில் சட்னியும் மூடி வைக்கப்பட்டி ருந்தன,நீங்க சாப்பிடுங்கப்பா ,ஏங் தேவைக்கு நானே சுட்டுக்கிறேன், என்றாள்,

காலையில் சாப்பிட்டு வருடக் கணக்காகி விட்டது,எப்படி வந்திந்தப் பழக்கம் எனத் தெரியவில்லை. வேலைக்குக்கிளம்புகிற அவரசம், பேருந்தை எட்டிப் பிடிக்கிற எத்தனம் எல்லாம் கைகோர்க்க சாப்பாட்டை துறந்து விட்டு ஓடி விடுகிறான்,

அது ஒன்றும் பெரிய பாதிப்பை உண்டாக்கினதாய் தெரியவில்லை இது நாள் வரை.ஆனாலும் அவ்வப் பொழுதான பசியடக்க முடியா காலை வேளைகளில் சாப்பிட்டுக் கொள்வதுண்டு கொஞ்சமாக/

பொதுவாக காலை வேளைகளில் சாப்பிடாமல் இருக்காதீர்கள். உடலுக்கும் குடலுக்கும்நல்லதில்லை. என இவனிடம் மருத்துவர் சொன்ன கூற்றை மீறியே வந்திருக்கிறான் இது நாள் வரை/

மீறல்கள் எப்பொழுது இவனில் சுழியிடுகிறது எனப் புரியவில்லை,நல்லதாய் நாலு கேட்டும்,படித்தும் பகிர்ந்துமாய் கொள்கிற சமயங்களில் மனம் பாவி விளைகிற விளைச்சல்களில் இது மாதிரியான மீறல்களும் முளைத்து கிளை விட்டது போலும்,

அது எப்பொழுது தீங்காகி என்ன மாதிரியான உடல் கேடில் வந்து முடியப் போகிறது எனத் தெரியவில்லை,

“சொன்னப்பேச்சக்கேக்குறபழக்கம்சின்னப்புள்ளையிலதான்இல்லையின்னா நாளைக்கிபுள்ளைக்கிகல்யாணம்ஆகிபேரன்பேத்தி எடுக்கப் போற வயசுலயும் இப்பிடி இருந்தா எப்பிடி,,?இதுநாள் வரைக்கும் புள்ளைங்க பின்னாடி ஓடுனது பத்தாதுன்னுஒங்கபின்னாடிஓடிக்கிட்டுத்திரியச்சொல்றீங்க,,”என்கிறமனைவியின் ஆதங்கத்தை மறுக்காமல் ஏற்றவனாய் நிலை கொள்வான்,

தோசைசாப்பிடப்பிடிக்கவில்லை,இப்பொழுது என இல்லை ,எப்பொழுதுமே அப்படித்தான்,

”அடக்கிறுக்கா,அவுங்கவுங்க வீட்டுல புள்ளைங்க அம்மாமார்கள நச்சரி ச்சி இட்லிக்கிப்போடலையா தோசைக்கிப்போடலையான்னு தூங்க விடமாட்டே ங்குறாங்க,நீ என்னடான்னா பழைய சோறு இருந்தா போதுங்குற,,,,என சின்ன வயதில் அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது,
 
தஞ்சாவூரில் இருந்த தினங்களில் அறையில் உடன் தங்கியிருந்தவர்கள் எல்லோரும்தேடித்தேடிப்போய்டிபன்வகையாறாக்களைவேட்டையாடிக்கொண்
டிருக்கும் போது இவன் மட்டும் போய் ரூம் இருந்த தெருவிலிருந்த மெஸ் ஸில் போய் சொல்லி வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பான், அதிலும் காலை வேளையில் பழைய சாப்பாடு கிடைத்தால் அமிர்தமாய் நினைத்து சாப்பிடுவான்,

அங்கு மட்டும்இல்லை, சங்கரபாண்டியபுரத்தில்வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் அலுலகாத்திற்கு எதிர்த்தாற்போல் இருக்கிற வீட்டில் சொல்லி வைத்துகாலையில் பழையசோறும் மதியம் சூடானதோசையும்சாப்பிடுவான்,

அந்த உணவுதான் அவனது உடலையும் உயிரையும் வளர்த்தது, அந்த நாட்க ளில்/

மீறிச் சாப்பிட்டால் தோசையைச்சாப்பிட்டால் வயிறு காற்றடைத்த பலூன் போல உணர வைக்கும், நீண்ட நேரம் வரை குறையாமல் இருக்கிற உணர்வால் பல நாட்களில் மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்திருக்கிறேன்,

காலை உணவாய் இரண்டு டம்ளர் கஞ்சி,உடன் ஒரு ஆம்ளேட் என பிளான் பண்ணி வைத்திருந்தான்,சிறிது நாட்களுக்கு முன்னால்,

இதை மனைவியிடம் சொன்ன போது ”ஆமா நீங்களும் ஒங்க பிளானும், இதெ ல்லாம் செய்யிறதுக்கு பேசாமா ஒரு வாய் சாப்புட்டுட்டுப் போயிருலாமுல்ல, என்றாள்,

பிளான் இன்னும் வரைவளவிலாகவே இருக்கிறது,அமல் படுத்த நேரமற்று இருக்கிறான், சமையலைறை விட்டு வந்ததும் மணியைப் பார்க்கிறான்,

பதினைந்துவருடங்களாய்பெரியதானபழுதேதும்இல்லாமல்ஓடிக்கொண்டிருக்கிற கடிகாரம்.

சின்னதுடனும்,பெரியதுடனுமாய் ஸ்னேகம் சேர்ந்து கைகோர்த்துக் கொள்கிற விநாடி முள்ளின் நகர்வு இவனுக்கு மிகவும் பிடித்ததாகவே/

விநாடி முள்ளின் அசைவுகளும் ஓட்டங்களும் எங்கும் எப்பொழுதும் முக்கிய மானதாகவே/

வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வெளியில் வரும் பொழுது நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது,

உடல்இப்படியாய்வெயில்குடித்துமிகவும்நாட்களாகிப்போனது,பரவாயில்லை இதுவும் நன்றாகவே இருக்கிறது,